வீரச்சாவடைந்த மாவீரர் விபரங்கள் மேலும் சில இன்று கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை இங்கே தருகின்றோம். 25.01.2009 அன்று இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். லெப்.செவ்வாணன் (தங்கவேலாயுதம் குணாளன், இல.197/ 2ஆம் பகுதி, திருவையாறு, கிளி நொச்சி.) கப்டன் சிலைவேந்தன் (கண்ணுச்சாமி சிறிதரன், இல.11/01,திருவையாறு, கிளிநொச்சி.) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர். 26.01.2009 அன்று பதினொரு போரா ளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மேஜர் அஜந்தன்/சந்திரன் (சந்தியாப்பிள்ளை யோசப், மன்னார் மாவட்டம், த.மு: கரியாலை நாகபடுவான், முழங்காவில், கிளிநொச்சி. வே.மு. உடையார்கட்டு வடக்கு, முல்லைத்தீவு.) ...
Read More »தேராவில் ஆட்லறி தள தகர்ப்பில் வீரச்சாவடைந்த 3 கரும்புலிகளும் 7 மாவீரர்களும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு ...
Read More »மாமனிதர் கலைஞானி செல்வரத்தினம்
கலைஞானி அ.செல்வரத்தினம் ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைச் தேடிப்பெற்றுப் பாதுகாக்க வேண்டும் என்று தன் வாழ்நாளையே அதற்காகவே அர்ப்பணித்து வந்தவர் திரு.த.செல்வரத்தினம் அவர்கள்.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காடுகரம்பையெல்லாம் அலந்து திரிந்து பல அரும் பொருக்களைக் கண்டெடுத்துப் பாதுகாக்க முற்பட்டவர். இப்பணிக்காக பிரமச்சரிய வாழ்க்கையை மேற்கொண்டு தனது சொத்து சுகங்களை எல்லாம் முழுமையாக அர்பணித்து வாழ்ந்தவர். 1933 ஆம் ஆண்டில் குரும்பசிட்டி அரியகுட்டி தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் முதலில் மகாதேவா ...
Read More »மாமனிதர் கணிதமேதை எலியேசர்
கணிதமேதை எலியேசர் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டல் மீதும் போராட்டத்தின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டு அதற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார். 1918 ம் ஆண்டில் தமிழீழத்தில் பிறந்த பேராசிரியர் கணிதவியலில் கலாநிதி பட்டமும் பெற்று கணித மேதையாக திகழ்ந்த நாட்களில் இவருக்குக் கிடைத்த சர்வதேச விருதுகள் பல.இவரது பெயரிலேயே 1948 வெளியிடப்பட்ட “எலியேசர் தேற்றம்” கணிதவியலில் இன்றும் பிரயோகிக்கப்படும் தேற்றமாகும்.ஆஸ்திரேலியாவிலிருந்துகொண்டு ஈழத்தமிழ்மக்களின் விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுத்து ...
Read More »மாமனிதர் விக்னேஸ்வரன்
தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம் 08.04.2006 தாயக விடுதலையைத் தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்துக்காக அயராது உழைத்த உன்னத மனிதரை தமிழீழ தேசம் இன்று இழந்துவிட்டது. எமது தாயகத்தின் தலைநகரில் விடுதலைக்காக ஒளிர்ந்த ஒரு சுதந்திரச் சுடர் இன்று அணைந்து விட்டது. தமிழர் தேசியத்தின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் ஓயாது ஒலித்த ஒரு பெரும் குரல் இன்று ஒடுங்கிவிட்டது. தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் ...
Read More »மாமனிதர் நடராஜா ரவிராஜ்
நடராஜா ரவிராஜ் (ஆனி 25, 1962 – கார்த்திகை 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் “ரவிராஜ் ...
Read More »மாமனிதர் பேராசிரியர் துரைராசா
“இங்கு அஞ்சலி உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை கடவுளை வேண்டுகின்றேன்.” வதிரியில் பேராசிரியர் துரைராசாவின் இல்லத்தில் நடந்த இறுதிச்சடங்கின்போது, அக்கிராமத்தின் வயோதிபர் ஒருவர் கூறிய அர்த்தம் பொதிந்த வரிகளே மேலுள்ளவையாகும். பேராசிரியரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்கு – நற்பண்புகள் நிறைந்த அப்பேராசானை மக்கள் மதித்து ...
Read More »லெப் கேணல் இசைவாணன்
தமிழீழ விடுதலைப்போராட்டம் பல போராளிகளின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டது. எங்கள் தேசத்தின் விடியலுக்காக தமது வாழ்க்கையினை தியாகம் செய்த எம் போராளிகள் ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் பெரும் தியாகத்தின் உச்சத்தை தொட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் சுரேன் என்றும் இசைவாணன் என்றும் அழைக்கப்படும் போராளியும் ஒருவராகிறார். தமிழீழ விடுதலைக்காக ஒரு காலை கொடுத்துவிட்டு அதற்கு மாற்றீடாக ஒற்றைச் செயற்கை காலோடு தன் வாழ்க்கையை தமிழீழ விடுதலைக்காக கொடுத்த உன்னதமான வேங்கை ...
Read More »லெப்.கேணல் கமலினி
மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி பங்குனி மாதம் 15 திகதி 2009 வீரச்சாவு ! வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார். சிறிலங்கா அரசின் பயங்கரவாத படைகள் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இந்த மக்களுக்கான சிகிச்சைப் பணிகளை முதன்மையாகச் செய்து கொண்டிருந்த நிலையில் ...
Read More »மாமனிதர் தில்லை ஜெயக்குமார்
“கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகச் செயற்பட்டு, எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு அயராது உழைத்த ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்துவிட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று சோகக்கடலிலே மூழ்கிக்கிடக்கிறது. திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் ஒரு பண்பான மனிதர். நெஞ்சில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர், பொதுநலத்தையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இனிமையான பேச்சும், எளிமையான ...
Read More »