Breaking News
Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / தேராவில் ஆட்லறி தள தகர்ப்பில் வீரச்சாவடைந்த 3 கரும்புலிகளும் 7 மாவீரர்களும்

தேராவில் ஆட்லறி தள தகர்ப்பில் வீரச்சாவடைந்த 3 கரும்புலிகளும் 7 மாவீரர்களும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.

ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்கிருந்து இயக்கி சிறிலங்கா படையினர் மீது செறிவான பீரங்கித் தாக்குதல்களை நடத்திய பின்னர் அத்தளத்தினை அழித்துவிட்டு தளம் திரும்பினர்.

இதில் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான எறிகணைகளும் வெடிமருந்துகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா படையினர் தரப்பில் 50-க்கும் அதிமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கரும்புலி லெப்.கேணல் மாறன்

கரும்புலி மேஜர் தமிழ்மாறன்

கரும்புலி கப்டன் கதிர்நிலவன்

மேஜர் மலர்ச்செம்மல்

கப்டன் ஈழவிழியன்

கப்டன் காலைக்கதிரவன்

கப்டன் கலைஇனியவன்

ஆகிய போராளிகளுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

லெப்ரினன்ற் கேணல் புதியவன் மாஸ்டர்

புதியவன் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகநேசன் என இயற்பெயர் கொண்ட புதியவன் என்ற மாவீரரின் போராட்ட ...

Leave a Reply