Home / பிற ஊடகங்கள் / பகிரப்படாத பக்கங்கள் / மாஸ்ரரை அனுப்புங்கோ….

மாஸ்ரரை அனுப்புங்கோ….

போர்க்களமத்தில் ஆயிரம் சோதனைகளும், வேதனைகளும் இருந்தும் அத்தனையையும் ஓர் புன்னகைக்குள் அடக்கி சாதனைச் சிகரமாக உயந்தவர்கள் எங்கள் மாவீரச் செல்வங்கள்.

களவாழ்விலும், ஓர் பணியிலும் அந்த சூழலில் போராளிகளின் செயலில் வார்த்தைகளும் உதிரும் நகைச்சுகைவளுக்கு பஞ்சமிருக்காது.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி கண்டி வீதி – இத்தாவிற் போர்க்களத்திற் சண்டைகளுக்குள் ஈடுபட்டிருந்த போது….

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியான லெப்.கேணல் ராஜன் (ராஜசிங்கம்) அண்ணா அவர்கள் அங்கு நடக்கும் கடுமையான சண்டைகள் சற்றுத் தணிந்துவிட்டால் ஆட்டுக் கறிக்குத் தயார்பண்ணத் தொடங்கிவிடுவார்.

போர்க்களமும் கறிக்களமும் ஒன்றாகவே அங்கு நடக்கும். அந்தக் களமுனையின் ஒரு பகுதியிற் கட்டாக்காலி ஆடுகள் திரிவது வழக்கம்.

அந்தக் களப் பகுதியில் உள்ள போராளிகளுக்கு ராஜன் அண்ணா வோக்கியில் அறிவிப்பார்.

“இஞ்ச கொஞ்சம் தணிஞ்சுபோய் இருக்கு, வகுப்பு எடுக்கலாம் போலகிடக்கு, நிண்டால் ஒரு மாஸ்ரரை அனுப்புங்கோ.” ‘மாஸ்ரர்’ என்பது ஆட்டுக்கிடாய் என்று அவர்களுக்கு மட்டும் புரியும். அது அவர்களுக்கிடையினான மொழி. மாஸ்ரர் – அதுதான் கிடாய் ஆடு. ராஜன் அண்ணாவின் கட்டளை போலவே ஒவ்வொரு காவலரணுக்கும் கறியும் போகும்.

ஒருமுறை சண்டை தனிந்திருப்பதாகவும் மாஸ்ரரை வகுப்பெடுக்க அனுப்புமாறு ராஜன் அண்ணா அறிவித்தபோது பதில் வந்தது.

“இஞ்ச மாஸ்ரர் ஒருத்தரும் இல்ல, வகுப்ப இண்டைக்குக் கைவிடுங்கோ”.

“ஒரு மாஸ்ரரும் இல்லையோ?”

“மாஸ்ரர் இல்ல ரீச்சர் நிக்கிறா அனுப்பவோ” ராஜன் அண்ணாவிற்கு புரிந்துவிட்டது. ரீச்சரெண்டு அவங்க மறியாட்டைச் சொல்லுகிறார்கள் என்று.

“ஒ ஒ ஒ ரீச்சரெண்டாலும் பரவாயில்லை வகுப்பெடுத்தாச் சரி” இந்த ரீச்சர்ப் பகிடி இயக்கத்திற் பரவலாக எல்லா இடமும் பரவத் தொடங்கியது.

சண்டை முடிந்து அடுத்த சண்டைக்குப் புறப்பட இருந்த நேரம். போராளிகளைச் சந்திப்பதற்காகத் தேசியத் தலைவர் வந்திருந்தார். அவர் புறப்படும்போது….

“தம்பியாக்கள் இனிச் சனங்களின்ர இடங்களுக்குள்ள போகப்போறியள். அங்க சாமானுகள் எதிலும் கைவைச்சுப்போடக்கூடாது. ஆடு, மாடு, கோழிகளையுந்தான் சொல்றன்” அன்று கூறிவிட்டு அருகிலிருந்த ராஜன் அண்ணாவைப் பார்த்துப் பெரிதாகச் சிரித்தபோது கூச்சப்பட்டு அந்தரப்பட்டுச் சிரித்தார். எல்லோருக்கும் அவரைப் பார்க்கச் சிரிப்பு வந்தது.

எல்லாம் முடிந்து வந்தபின்னர் ராஜன் அண்ணா கூறினார். “நாங்கள் எங்கட பிரச்சினையை மட்டும் பாக்கிறம், பாவம் அண்ணை எவ்வளவு பிரச்சினைகளைப் பார்க்க வேணும்”.

– நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

போராளியின்யின் குறிப்பேட்டிலிருந்து…

இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. ...

Leave a Reply