Home / பிற ஊடகங்கள் / பகிரப்படாத பக்கங்கள் / போராளியின்யின் குறிப்பேட்டிலிருந்து…

போராளியின்யின் குறிப்பேட்டிலிருந்து…

இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு.

இவ் இயந்திரம் சண்டைப்படகுகளிலும் , விநியோகப்படகுகளிலும் ( உள்ளிணைப்பு இயந்திரமாக ) பயன்படுத்தப்பட்டது.

கடற்புலிகளில் பல பிரிவுகள் அதில் ” சதீஸ் இயந்திரவியல் ” ( டோறா ரிம் – டிசல் இயந்திரம் ) என சில ஆண் – பெண் போராளிகளுக்கு இயந்திர பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

எம் பிரிவிற்கு லெப் கேணல் கடாபி அண்ணா பொறுப்பாளராக இருந்தார், நாளடைவில் கடலில் காவியமான ” தமிழ்முரசு ” அண்ணா தனியாக டிசல் பிரிவிற்கு பொறுப்பாளராக நியமிக்க்கப்பட்டார்.

சொல்லமுடியா சில பணிகள் தாயகத்தில் விரிந்தன சதீஸ் இயந்திரவியல் பட்டறையில்…

கடாபி அண்ணா மேற்பார்வையாளரும் இயந்திரப்பிரிவின் பொறுப்பாளராக இருந்தமையால் பட்டறையில் பலவகையான இயந்திர தெளிவூட்டல்கள் , பயிற்சிகள் அளித்தார் போராளிகளுக்கும்…

ஆயினும் முதல் நாள் இரவு இயந்திர பட்டறைக்கு ( உள்ளிணைப்பு இயந்திரம் – அதாவது இந்த இயந்திரம் ) வேலைக்காக வந்தது. அதைப் பற்றி சில போராளிகளுக்கு விரிவாக்கம் இல்லை, அந்தப் போராளிக்கு அதைப் பற்றி முதல் தடவை கடாபி அண்ணா அதன் விரிவாக்கம் கூறியிருந்தார். அன்று காலை காலைக் கடமைகள் முடித்து, இயந்திர நிலையத்துக்குள் சுத்தம் செய்வதற்கு பிரவசித்த வேளை, அந்த வாசலில் அந்த இயந்திரத்துடன் வந்த மூன்று போராளிகள் நின்றனர். அப்போது அந்த போராளியைப் பார்த்து கேட்கிறார்கள்.

அண்ணா…. இது எவ் வகையான இயந்திரம் என்ற…

( அப்போராளிகள் ஏற்கனவே படையணிக்குள் இயந்திரம் இணைக்க செல்லுகையில் நன்றாக அறிமுகமானவர்கள் ) ஆகையினால் …

நகைச்சுவையாகவே கூறுகிறான் அந்த போராளி….

இதுதான்….!
கடற்புலிகளில் புதிதாக இறக்கப்பட்ட கடாபி 4 ஸ்ரோக்
( அதாவது சண்டைப் படகுகளில் 2 ஸ்ரோக் இயந்திரம் தான் பயன்படுத்தப்பட்டது ) எனக் கூறி வாசலை நெருங்குகையில் …

அந்தப் போராளிகள் சிரிக்கின்றனர்.

…. ஆயினும் இடையில் கண்டர் வாகனம் ஊடறுத்து நின்றதால் அவர்கள் பார்வையில் நேரே கடாபி அண்ணா அவர்களுடன் கதைத்து ஏதோ செய்துகொண்டிருந்தார்.

அப்போது அந்தப் போராளி கடாபி அண்ணையைக் கண்டு தலையை சொரிந்து குறும்பு சினுங்கள் சிணுங்க கடாபி அண்ணா சிரிப்பை அடக்கிய வண்ணம் பார்த்தார்.

இங்கே வா என அழைகிறார்.

என்ன சொன்னாய் …?

இல்லை…. எனக்கு பெயர் வடிவாக தெரியவில்லை ” மேற்…..குறி ” வடிவாக உச்சரிப்பு வரவில்லை…

ஆனதால் ஆசானின் பெயரே உச்சரிபாய் வாயில் வந்தது.

அதனால்…… கூறினேன் ” கடாபி 4 ஸ்ரோக் என….

முதுகில் படார்….என தட்டினார்.

அப்படியே அவர் வாகனத்தில் கவனம் எடுக்க மெதுவாக அந்த போராளி உள்ளே சென்று கடமையை முடித்தவுடன்.

அணிவகுப்கு மைதானத்தில் போராளிகள் யாவரும் கூடி நிற்க எல்லோருக்கும் செய்ய வேண்டிய கடமைகள் விளங்கபடுத்தி விட்டு. கூறுகிறார் கடாபி அண்ணா …

அந்த போராளியைப் பார்த்து ….

” …… நீர் இன்றையிலிருந்து என்னை மாஸ்ரர் என்றும் அண்ணா என்றும் கூப்பிட வேண்டாம் கடாபி என்றே அழையும் என ….”

அப் போராளி…. இல்லை மாஸ்ரர்….

அதுதான் சொன்னேன் அல்லவா…

இல்லை அண்ணா …..

கோபத்தை ஏற்படுத்தாதீர் … சென்று கடமையை செய்யும் என கூறிவிட்டேன் அவ்வளவுதான் என எழுந்து விரைந்து சென்றார்.

மற்ற போராளிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது …

ஆயினும் பின்பு ..

என்னடா நடந்தது வழமை போல் மாஸ்ர கோபபடுத்தினியா..?

நடந்தத அந்த போராளிகள் கூறினார்கள்.

உனக்கு தேவைதான் என்றார்கள்.

மறுநாள் இன்னொரு தவறுக்கு சுத்தியல் நீண்ட தூரம் பறந்தது…

ஆசானுக்கு தெரியும் என்றும் மாணவன் குறும்பாக இருந்தாலும் அவன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டார்.

நம்பிக்கையாக முல்லைதீவிலிருந்து மன்னார் மாவட்டம் முதல் திருகோணமலை வரை மற்றும் படையணிகளுக்குள் இயந்திரம் பூட்ட சில தேவைக்கு தனிமையிலும் போராளிகளுடனும் அனுப்பினார்.

ஆயினும் தேசகாதலுடனும் , குருபக்தியுடனும் கடமையும் விரிந்தது.

ஒரு முறை சிறப்புத் தளபதி வேறு கடமைக்கு போராளியைத் தெரிவு செய்த வேளை கடாபி அண்ணையால் அப் போராளியின் பெயரும் கொடுக்கப்பட்டு சர்வதேசக் கடலிலும் விரிந்தது.

காலம் செல்ல அலைகடலில் காற்றில் தவழ்ந்தது கடாபி அண்ணனின் பிரிவு செய்தி…

லெப் கேணல் கடாபியாக கடமை முடித்து சென்ற எம் ஆசான்….!

நீர் நினைத்த விடுதலை காணும் தமிழீழம்
நீர் தொடர்ந்த தலைவனின் காலம் அதை வெல்லும்…

இதை வருகையிலே கண்கள் ஓரம் கசிகிறது உம் ஈகத்தினால் …

– இசைவழுதி.

About ehouse

Check Also

இராணுவவீரன் காதலிக்கு வரைந்த மடல்…!

இது தமிழீழத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம், அன்று ஓர் இராணுவ சண்டைக்கு திட்டம் வகுத்துக்கொண்டிருந்த தருணம் இராணுவ கட்டளை ...

Leave a Reply