லெப் மணி

இரணைஇலுப்பைக்குள முன்னரண் இராணுவத்தினரின் ரோந்து அணி மீதான தாக்குதல் ஒன்றுக்காக விசேட படையணியில் ஒருவனாக
முட்களும் காய்ந்த காட்டுப்பற்றைகள் ஊடான நகர்வு. கடுமையான களைப்பு குறைந்தளவான உணவும் நீரும். ஆனாலும் அவனது முகத்தில் மலர்ச்சி.
அந்தக் களைப்பிலும் தனது பொக்கற்றிலிருந்த சீப்பை எடுத்து, தலைவாரி அடுத்த கட்ட நகர்வுக்கான பயணம்.
37548091_1854318524863031_3372284595696304128_n.
22 – 07 – 2000, அதிகாலை வரவேண்டிய இராணுவத்தை குறிவைத்த அந்த தாக்குதல். எதிர்பார்த்ததிலும் அதிக ஆயத்தங்களுடன் இராணுவத்தினர். எனினும் சமாளித்திருக்கலாம். ஆனால் சறுக்கிவிட்டது.

இராணுவத்தினரின் சூட்டில் இவனது இயக்கம் நின்றுவிட, இவனை இழுத்துக்கொண்டு பின்னகர முடியாத இறுக்கம்.
அப்போதுதான் அவனது கைக்குள்ளே கிளிப்பை களட்டியபடியே இருந்த கைக்குண்டு கீழே விழவும், அதனை கண்ணிமைக்கும் கணத்திலேயே எதிரியை நோக்கி எறிந்துவிட்டு, அன்று அவனது அந்த வித்துடலையும் மீட்க முடியாமல் பின்னகர்ந்த நாட்கள். இன்று எப்படியோ அவனது திருவுருவப்படத்தை கண்டபோது மீள்நினைவாய்.

அடுத்த வாரத்தில், அவனது நினைவுகளை சுமந்து, அதே இராணுவ முகாமுக்குள்ளே சென்று, தாக்குதலை மேற்கொண்டு இரண்டு துப்பாக்கிகளையும் மீட்டுக்கொண்டு, தளம் திரும்பியபோது, பத்து இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அன்றைய இரவு பிபிசியில் செய்தி வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்த நாட்கள் இன்னமும் பசுமையாய்..

பகிர்வு – வேங்கைச்செல்வன்

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply