விடுதலைப்புலிகள் என்றால் யார்? அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது? அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சக போராளிகளை யும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் நேசித்தார்கள்?
இந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.!
இது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும், பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. அதில் ஒன்றை இந்த கேள்விகளுக்கான விடையாகப் பதிவு செய்கின்றேன்.
நான் இதை பதிவு செய்வதற்கு காரணம், புலிகள் ஏதோ ஒரு ஆயுத குழுவோ, அல்லது கொடும் கோலர்களோ அல்ல. மாறாக தமது தேசத்தையும், மக்களையும் உளமார நேசித்து அதற்காகவே மடிந்த உன்னத வீர்கள். மடி சுரந்த பால்போல, மனம் தூய்மை யானவர்கலென்பதைக் கூறுவதற்கே.
சமீபகாலமாக இணையத்தில் எம் வீரர்களை இழிவுபடுத்தும் முயற்சிகள் திட்டமிட்டு விதைக்கப்படுகின்றது. புதிய தலைமுறையிடம் பிழையான வரலாறு போய்ச் சேரக்கூடாதென்பது மட்டுமே எனது நோக்கம்.
இந்த சம்பவம் புத்தளத்தை அண்டி, எதிரி பிரதேசத்தில் நடந்த சம்பவம். சில காரணங்களுக்காக சம்பவம் நடந்த இடத்தை மட்டும் குறிப்பிடுகின்றேன்.
ஒரு நடவடிக்கை நிமித்தம், ஒரு அணியொன்று 1997களின் நடுப்பகுதியில் கொழும்புக்கு நகர்த்தப்பட்டிருந்தது. அந்த இல்க்கை அழிப்பதற்கான நாள் நெருங்கி வரும் நேரம், எமது ஆதரவாளர் ஒருவரின் கைதின் மூலம் இந்த நடவடிக்கையாளர்கள் சிங்கள உளவுத்துறையால் இனம் காணப் பட்டனர்.
இதனால் இவர்களின் உயிர் ஆபத்தை கருத்தில் கொண்டும், வேறு சில காரணங்களுக்காகவும் இவர்களை தளம் திரும்பும்படி கட்டளையிப்பட்டிருந்தது.
அன்றைய நேரத்தில் பல நாட்கள் நடந்தே, எமது அணி கொழும்புக்கு பயணபட்டுக்கொண்டிருந்தது. இதற்காக பல பாதைகள் பயன்பாட்டில் இருந்தது. அது போல நகர்வுக்கு, வேறு பல முறைகளும் இருந்து பாவிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது வில்பத்து காட்டின் ஊடான பயணதின் போது.
அதன்படி இவர்களுக்கான வழி காட்டிகள் துணையுடன், குறிப்பிட்ட இடமொன்றிலிருந்து வழிகாட்டி, மற்றும் ஒரு கரும்புலி வீரனுடன் சேர்த்து ஐந்து போராளிகள் நகர ஆரம்பித்தனர். அதன்படி ஆரம்ப இடத்திலிருந்து நடந்தும், வாகனத்திலுமாக புத்தளம் தாண்டி “தபோவ” என்ற இடத்தை சென்றடைந்தனர்.
அங்கிருந்து இந்த அணியை பெரும் காடு உள்வாங்கியது. அது வரை பயணத்தின் போது மிக எச்சரிக்கையாகவே பயணப்பட்டனர். இராணுவ காவலரண்கள், மினிமுகாம்கள், காவல் நிலையங்கள், ரோந்து அணிகள், அத்தோடு தமிழரை விரோதியாக பார்க்கும் சிங்கள குடிமக்கள் என, அனைத்து கண்ணிலும் மண்ணை தூவி, ஓரளவு பாதுகாப்பான இடம் ஒன்றை வந்து சேர்ந்திருந்தது அந்த அணி.
அந்த இடத்தின் பாதுகாப்பான இடமொன்றில், கொண்டு வந்த உலர் உணவை பங்கிட்டு உண்டபின், சிறிய ஓய்வின் பின் தமது பயணத்தை ஆரம்பித்தனர். மூன்றுநாட்கள் பயணத்தின் பின் “பலகொள்ளகம” (balagollagama) என்ற இடத்தை அண்டி இந்த அணி நகர்ந்து கொண்டிருந்தது.
அது ஒரு மலை நேரம். காடுகளின் ஊடக அணி நகர்ந்து கொண்டிருந்த போது, யாரோ உரையாடும் சத்தம் கேட்டது. உடனே போராளிகள் பாதுகாப்பான இடம் தேடிப்பதுங்கினர்.
இப்படி காடுகளின் ஊடான பயணத் தின் போது போராளிகள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை, ஒன்று, சிங்கள வேடைக்காரர்களால் கட்டி வைக்கப்படும் வேட்டை துவக்கு. இரண்டாவது, “சிங்கள அரசின் நடமாடும் சிறப்பு படையணியான SF” என்று சுருக்கமாக அழைக்கப்படும் உந்துருளிப்படையணியாகும்.
ஏனெனில், இந்த அணிகள்(போராளிகளுக்கு) நகரும் போது இவர்களது கையில் உள்ள வரைபடத்தில் எல்லா விபரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கேற்றால் போலவே இவர்கள் பயன்படுவார்கள். ஆனால், இந்த “நடமாடும் SF” எங்கு, எப்போது வருவார்கள் என்று தெரியாது. எங்காவது ஒரு இடத்தில் போராளிகளுடன் முட்டுப்படும் போதே அது தெரியும்.
இப்படியான ஒரு அவதானத்துடன் செல்லும் போது தான் அந்த சத்தம் கேட்டது. இப்போது அந்த சத்தம் இவர்களை நெருங்கி வந்தது. போராளிகளின் இதயத்துடிப்பும் வேகம் பெற்றது. இப்போது அந்த குரல்கள் தெளிவாக கேட்டது. அது மூன்று பெண்களின் உரையாடல் சத்தம்.!
அந்த மூன்று இளம் பெண்களும் 22வயதிற்கு குறைவான இளம் வயதினர். தமது வீட்டு தேவைக்கான விறகு வெட்டிச் செலவதற்காக வந்திருந்தனர். அவர்கள் காய்ந்த விறகை தேடி நகர்ந்தபடி, போராளிகள் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கினர்.
அப்போது போராளிகள் பயந்தது போலவே இவர்களைக் கண்டு விட்டனர் அந்த சிங்களப் பெண்கள்.!
ஒரு நாட்டின் சிறப்பு படையணி வீரர்கள், எதிரி பிரதேசத்தினுள், நடவடிக்கை நிமித்தம் நகரும் போது, எப்படி எல்லா காலநிலைக்கும் தாக்குப்பிடித்து, கிடைப்பதை உண்டு உயிர்வாழ கற்றுக்கொடுக்கப்படுகின்றதோ, அது போலவே மிக முக்கியமானது இப்படியான நேரத்தில் யாராவது இவர்களது நடமாட்டத்தை கண்டால், அவரை கொன்று, அந்த உடலை மறைத்து பின் நகரவேண்டும். அது பொதுமக்களுக்கும் பொருந்தும்.!
இந்த முறையையே பொதுவாக எல்லா நாட்டு சிறப்பு இராணுவப் படையணியினரும் கையால்கின்றனர்.! புலிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
இது மரபுவழி இராணுவமாக இருந்த புலிகளின் சிறப்பு அணிகளுக்கும் பொருந்தும்.! யுத்தத்தில் இது தவிர்க்க முடியாதது.! அப்படி ஒரு சந்தர்ப்பம் தான், புலிகளின் சிறப்பு அணியினருக்கும் அன்று ஏற்பட்டிருந்தது.!
அந்த நேரத்தில் சிங்கள இராணுவத்தினரின் சீருடையில் இருந்த புலிகள், உடனே பற்றையினுள் இருந்து வெளிவந்து, ஆயுத முனையில் அந்த பெண்களை தமது கடுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். குடிமனைகளில் இருந்து தொலைவில் இருந்தமையால் அது இலகுவாக்கி விட்டிருந்தது.
அப்போது அந்த அணியின்பொறுப்பாக வந்த போராளி சரளமாக சிங்கள பேசக்கூடியவர். அவர்களுடன் உரையாடி அவர்கள் வந்த நோக்கத்தையும் அவர்கள் பற்றியும் தெரிந்து கொண்டனர். உரையாடலின் போதே அந்த பெண்களுக்கு இவர்கள் யாரென்று தெரிந்து விட்டது. மூவரும் அழ ஆரம்பித்தனர்.
அப்போது இவர்களைக் கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை. காரணம் இவர்களை உயிரோடு விட்டால், அடுத்த சில மணி நேரத்தில் சிங்கள உந்துருளிப்படையணியால் சுற்றி வளைக்கப் பட்டு, கொல்லப்படுவார்கள் என்பது புலிகள் ஐந்து பேருக்கும் தெரியும்.
ஆகவே, கொல்வதற்கு ஆயத்தப்படுத்தும் போது, தங்களுக்கு நிகழப்போவதை உணர்ந்த, அந்த சிங்களப்பெண்கள் விழுந்து, தொழுதபடி கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது அழுதபடியே தங்களை “எது வேண்டுமானாலும் செய்யும் படி கூறி” தங்களை உயிரோடு மட்டும் விட்டு, விடும் படி மண்ராடினர்.!
பல வருடங்கள் சிங்கள நாகரீகத்தை கரைத்து குடித்த அந்த அணித் தலைவனுக்கு, அவர்களின் வேண்டு கோளின் அர்த்தம் புரியாமல் இல்லை.
சிறு புன்னைகையின் ஊடே அவர்களின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தபின், அடுத்த கட்டத்துக்கு ஆயத்தமான போது, அந்த அணியிலேயே வயது குறைந்த, ஒரு இளைய போராளி, அண்ணை கொஞ்சம் பொறுங்கோ…
எனக்கு இவையளை பார்க்க பாவமா இருக்கு. இவர்களை இங்கேயே கட்டி போட்டு விட்டு போவம் என்றான்.
அதற்கு அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அந்த அணியில் இருந்த இனொரு போராளியும் அந்த இளைய போராளிக்கு உதவிக்கு வந்தான். தொடந்து அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அதுவரை அமைதியாக இருந்த, இவர்களுடன் பயணப்பட்ட கரும்புலிவீரனும் அவர்களுக்கு உதவிக்கு வந்தான்.
அப்போது அந்த மூன்று போராளிகளின் வற்புறுத்தல், அந்த அணித் தலைவனின் மனதை கரைத்து. வேறு வழி இல்லாது, அரைமனதுடன் அவர்களை உயிரோடு விட சம்மதித்தான்.!
இராணுவ விதிமுறையை மீறினால், அதன் பின் விளைவு என்ன என்பது அந்த அணியினருக்கு நன்கு தெரிந்திருந்தது. எந்த நிமிடமும் இவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம். பெரும்பாலும் எல்லோரும் மரணிக்கலாம்.!
அவர்கள் அதற்கு தயாராகவே இருந்தனர்.!
இது தான் விடுதலைப் புலிகள்.! எவ்வளவு உன்னதமான போராளிகள்.! தங்கள் உயிர் ஊசலாடுகின்றது என்பது தெரிந்தும், அதை எதிர்கொள்ள தயாரான அந்த வீரர்களின் இரக்க குணம் தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது.!
இவர்களை தான் பயங்கரவாதிகளாக பரப்புரை செய்கின்றனர் இன்று.!
அதன் பின் அந்த மூன்று பெண் களையும் இவர்களுடனேயே இன்னும் சில km தூரம் கூட்டி சென்றனர். பின் அவர்கள் மூவரையும் கை,கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு, அந்த பெண்கள் கூறிய நன்றியை காதில் வாங்கியபடி புலிகள் நகர ஆரம்பித்தனர்.
அந்த பெண்களுக்கும், அவர்களின் உறவினருக்கும் மட்டுமே, அன்று ஒரு உண்மை புரிந்திருக்கும்! புலிகளை எந்தளவு தூரம் “ஒழுக்கமாணவர்களாக” தலைவன் வளர்த்திருந்தாரென்று.!
இந்த சம்பவத்தின் பின் அந்த அணியினருக்கு, தமது பயணப்பாதையை மாற்றவேண்டிய தேவை எழுந்தது. ஏனெனில் இந்த பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு போய்ச் சேராது போனால், இவர்களை தேடி, இவர்களது உறவினர்கள் வருவார்கள்.
எப்படியோ சில மணி நேரங்களில், எல்லோருக்கும் தகவல் கிட்டும். ஏதோ ஒரு இடத்தில் இவர்கள், சிங்கள SF படையணியுடன் முட்டுப்படுவார்கள். அதை உணர்ந்து ஒட்டமும் நடையுமாக தங்கள் பயணப்பதையை மாற்றிச் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் பயந்தது போலவே, அடுத்த நாள் இவர்களை இனம் கண்ட எதிரி தாக்குதலை தொடுத்தான். இதில் அந்த இளைய போராளி கால் துடையில் காயமடைந்தான். அந்த போராளியையும் தூக்கிக் கொண்டு பெரும் காட்டை நோக்கி நகர்ந்தனர். உடனே எதிரி இவர்கள் முன்னோக்கி ஓடுவார்கள் என்றே கணிப்பார்கள் என்பதை உணர்ந்த அணித்தலைவர், காயமடைந்த அந்த இளைய போராளியுடன் பின்னோக்கி நகர்ந்தனர்.
ஒரு பாதுகாப்பான இடம் ஒன்றை அடைந்து அங்கு தங்க முடிவெடுத்தனர். அப்போது இவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடும் இருந்தது. அதோடு இன்னும் கடக்கவேண்டிய தூரமோ மிக அதிகம். அதனால் காயமடைந்த போராளியை தூக்கி சுமப்பதும் சிரமம். அப்படி தூக்கி சென்றாலும் வேகமாக நகர முடியாது.!
அதனால், மீண்டும் எங்காவது முட்டுப்பட வேண்டி வரலாம்? அப்படி தூக்கி சுமந்தாலும் இரத்த போக்கு காரணமாக அந்த போராளி எம்மை விட்டு போவது தவிர்க்க முடியாது. அதனால் என்ன செய்வதென்று எல்லோருக்கும் குழப்பம்.
அப்போது அந்த போராளியை சுமந்து செல்வதற்கு முடிவெடுத்து, படுக்கை ஒன்றை தயார் செய்ய ஆரம்பித்த போது அந்த இளைய போராளி அதை தடுத்தான். அப்போது அவன் “அண்ணை நான் கன நேரம் உயிரோடு இருக்க மாட்டன்” என்னை காவி நீங்களும் அடி வேண்ட வேண்டி வரும், அந்த கரும்புலி வீரனை காட்டி “அவரது உயிர் முக்கியம்” நீங்கள் “தப்பி போங்கோ” என்றான் தீர்க்கமாக.
அவனது வார்த்தையில் இருந்த உண்மை, அவனது கோரிக்கைக்கு எல்லோரையும் செவிசாய்க்க வைத்தது. அப்போது அந்த இளைய போராளி தன்னை கிடங்கு கிண்டி தாட்டு விட்டு செல்லும் படி கோரிக்கை வைத்தான். ஆகவே அதற்கான கிடங்கை கிண்டும் படி கூறினான்.
அதன்படியே ஏனைய போராளிகள், பெரும் மனச்சுமையுடன் தடியின் உதவியுடன் கையால் கிடங்கொன்றை கிண்ட ஆரம்பித்தனர். அது ஒரு மணல் பிரதேசம் என்பதால் அந்த வேலை இலகுவாக முடிந்தது.
அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த போராளி தனக்கு தாகமா இருக்கென்று கேட்டு, ஒரு குளிர்பான கானை உடைத்து சிறிது குடித்தான். சிறிது குடித்ததும் “அண்ணை எனக்கு போதும் இதை நீங்கள் பங்கிட்டு குடியுங்கோ, சாகப்போற எனக்கு எதுக்கு” என்றான்.!
எல்லோரும் கண்ணீருடன் அவனை பார்த்த போது, தனது வலியை மறந்து எல்லோரையும் சிரிக்க வைக்க முயட்சி செய்து தோற்றுப்போனான்.!
சிறிது நேரத்தின் பின் தன்னை அந்த கிடங்கில் தூக்கி வளர்த்தும் படி கூறினான்.!
அதை யாரும் செய்ய முன்வரவில்லை.!
சிறிது நேரத்தின் பின் தூரத்தில் எதிரியின் உந்துருளியின் சத்தம் கேட்டு எல்லோரிடமும் பதட்டம் தொற்றியது. அப்போது அந்த போராளி அங்கிருந்த படியே குப்பியை(சயனைட்) கடிக்க ஆயத்தமான போது, அதை தங்களால் பார்க்க முடியாதென்ற போராளிகள், அவனை தூக்கி அந்த கிடங்கில் வளர்த்தினர்.!
எல்லோரும் கண்ணீருடன் அவனிடம் விடை பெற்ற போது, அவன் புன்னகையுடன் அதை ஏற்றான்.!
தொடர்ந்து, இவர்களைப் பதுகாப்பாக சென்றுவிடும்படி கேட்டபின், அந்த அணித்தலைவனிடம், தனது மரண செய்தியை இவனே தனது பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தான்.
அத்தோடு என்ன காரணத்துக்காக தான் மரணமடைந்ததையும், தன் தாயிடம் கூறும்படி கூறினான்.!
ஏனெனில், அந்த இளைய போராளிக்கு இரண்டு பெண் சகோதரிகள் இருந்தார்கள்.!
ஆகவே, தனது உணர்வை அவனது தாயால் உணரமுடியுமென்றும், அவரது மனம் அதனால் சாந்தியடையுமென்றும் வேண்டினான்.
அப்போது அந்த அணித்தலைவன், அவனிடம் கூறினான், நான் எடுத்த ஒரு தவறான முடிவால் உன்னை இழந்துவிட்டேன் என்றபோது, இல்லை அண்ணை நீங்கள் எடுத்தது தான் சரியான முடிவு. அவர்கள் என் சகோதரிகள் போல இருந்தார்கள் என்றான்.!
அது போலவே ஏனைய போராளிகளுக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தது, தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பெண்களை காப்பாற்றியதற்கு.
ஆனால், எல்லோருக்கும் பொதுவான ஒரு காரணம் இருந்தது.!
எவ்வளவு தூரம் எமது மக்களை இந்த போராளிகள் நேசித்தர்களோ, அந்தளவு தூரம் எதிரியின் மக்களையும் நேசித்தார்கள்.!
இவர்கள் தான் எங்கள் போராளிகள்.!
என்ன தவம் செய்தோம் இவர்களுடன் உறவாட.!
எம் தேசம் தந்த மாணிக்கங்கள் எங்கள் மாவீரர்கள்.!
சில நிமிடங்களின் பின்,மரணித்த அந்த வீரனுக்கு, உளமார தங்கள் வீரவணக்கத்தை செலுத்திய பின், தமது இருப்பிடம் நோக்கி நகர ஆரம்பித்தனர்.
அதன் பின் பல ஆபத்துகளைக் கடந்து எதிரியின் தாக்குதல்களையும் முறியடித்து, பல நாட்கள் தாமதமாக உணவில்லாது, கிடைத்தவற்றை உண்டு, தமது இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர்.!
ஒரு வாரத்தின் பின் ஒட்டிசுட்டானுக்கு அருகாமையில் இருந்த அவனது வீட்டுக்கு சென்ற அந்த அணித் தலைவனால், சில நிபந்தனைகளுடன் அவனது பெற்றோருக்கு வீரச்சாவுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
அந்த போராளிக்கு ஒரு நடுகல் கூட இல்லாது, ஊரறியாது, தங்கள் சோகங்களை மறைத்து வாழ்ந்தது அந்த குடும்பம்.
பின்னைய நாளின் அந்த அணித் தலைவனின் குடும்பமானது அந்த குடும்பம், அவனை மகனாகவும், சகோதரனாகவும் ஏற்றது அந்த குடும்பம்.!
ஒரு வெளித்தெரியாத வீரனின் வரலாற்றை, பெருமை, பெயர்,புகழ், கல்லறை, மாவீரர் குடும்பம் என்ற கௌரவம், என எல்லாவற்றையும் துறந்து, தங்களை, தங்கள் நாட்டுக்காக அர்ப்பணித்த குடும்பங்களில் அந்த இளைய போராளியின் குடும்பமும் ஒன்று.!
இது தான் எங்கள் மக்கள்.!
இவர்கள் தான் எங்கள் வீரர்கள்.!!
வலிகளுடன்…
– ஈழத்துத் துரோணர்.!!!