Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 (page 2)

மாவீரர் 2009

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன். வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தினும் வீரத்தின் ...

Read More »

வீரச்சாவடைந்த மாவீரர்கள் – 2009 (தொகுக்கப்படாதவை)

வீரச்சாவடைந்த மாவீரர் விபரங்கள் மேலும் சில இன்று கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை இங்கே தருகின்றோம். 25.01.2009 அன்று இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். லெப்.செவ்வாணன் (தங்கவேலாயுதம் குணாளன், இல.197/ 2ஆம் பகுதி, திருவையாறு, கிளி நொச்சி.) கப்டன் சிலைவேந்தன் (கண்ணுச்சாமி சிறிதரன், இல.11/01,திருவையாறு, கிளிநொச்சி.) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர். 26.01.2009 அன்று பதினொரு போரா ளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மேஜர் அஜந்தன்/சந்திரன் (சந்தியாப்பிள்ளை யோசப், மன்னார் மாவட்டம், த.மு: கரியாலை நாகபடுவான், முழங்காவில், கிளிநொச்சி. வே.மு. உடையார்கட்டு வடக்கு, முல்லைத்தீவு.) ...

Read More »

தேராவில் ஆட்லறி தள தகர்ப்பில் வீரச்சாவடைந்த 3 கரும்புலிகளும் 7 மாவீரர்களும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு ...

Read More »

லெப் கேணல் இசைவாணன்

தமிழீழ விடுதலைப்போராட்டம் பல போராளிகளின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டது. எங்கள் தேசத்தின் விடியலுக்காக தமது வாழ்க்கையினை தியாகம் செய்த எம் போராளிகள் ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் பெரும் தியாகத்தின் உச்சத்தை தொட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் சுரேன் என்றும் இசைவாணன் என்றும் அழைக்கப்படும் போராளியும் ஒருவராகிறார். தமிழீழ விடுதலைக்காக ஒரு காலை கொடுத்துவிட்டு அதற்கு மாற்றீடாக ஒற்றைச் செயற்கை காலோடு தன் வாழ்க்கையை தமிழீழ விடுதலைக்காக கொடுத்த உன்னதமான வேங்கை ...

Read More »

லெப்.கேணல் கமலினி

மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி பங்குனி மாதம் 15 திகதி 2009 வீரச்சாவு ! வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார். சிறிலங்கா அரசின் பயங்கரவாத படைகள் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இந்த மக்களுக்கான சிகிச்சைப் பணிகளை முதன்மையாகச் செய்து கொண்டிருந்த நிலையில் ...

Read More »

லெப்.கேணல் அருணன் (சந்திரன்)

இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது…. காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்…. தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று. யாரெண்டு ...

Read More »

வலிசுமந்த நினைவுகள் – புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான்

17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு சூரியன் மட்டும் தன் கதிர் பரப்பி எழுந்து வந்தான். இரத்தமும், பிய்ந்து போன தசைத் துண்டுகளாகவும், வெடித்துச் சிதறுகின்ற இரும்புத் துண்டுகளாகவும் அழுது கொண்டிருந்தது நந்திக்கடல் விரிந்து கிடந்த அந்த பிரதேசம். திரும்பும் இடமெங்கும் அழுகுரல்கள். விட்டுப் ...

Read More »

அன்புக்கு இலக்கணம் சங்கவி

அன்புக்கு இலக்கணம் ஆகிய அழகிய வதனம் கொண்ட சங்கவியை தெரிந்தவர்கள் யாராலும் மறக்கவே முடியாது…… அமைதியான சுபாபம் கொண்டவள். கூட இருப்பவர்களுக்கு உதவிடும் நல்ல உள்ளம் படைத்தவள். இரக்க குணம் அவளோடு கூட பிறந்தது. பழகியவர்களால் அவளை மறப்பது மிகவும் கடினம். 1998ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டவள் சிறுத்தைப் படையணியில் நித்திலா 1 பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்துக் கொண்டு மூன்றுமுறிப்பு ...

Read More »

மாவீரன் சுகுமார்

தமிழீழத்தின் வளம்மிக்க கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுர கிராமத்தில் இராசு ரட்ணசிங்கமாக 09/01/1980 ஆண்டு மூன்று சகோதரிகளுக்கு தம்பியாக பிறந்தான் மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தான் அவனது சிறுவயதில் தந்தை இறந்துவிட தாயார் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பிள்ளைகளை படிக்கவைத்து வளர்த்து வந்தார் இவனை எல்லோரும் சுதா என்றே அழைத்துவந்தனர் பாடசாலை கல்வி கற்றுவந்த வேலையில் யாழ்ப்பாணத்தை சிறிலங்கா படைகள் ஆக்கிரமித்ததன் விளைவாக பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வன்னியில் குடியேறியிருந்தனர் அதன்படி ...

Read More »

கவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து

யாழ்ப்பாணம் அரியாலை ஆனந்தன் வடலி வீதியில் மயில்வாகனம் திலகவதி தம்பதிகளுக்கு 1975 ஆம் ஆண்டு யூன் மாதம் 29 அன்று ஆறாவது புதல்வனாக பிறந்தவன் தான் லெப் கேணல் சிந்து. இவனது இயற்பெயர் தயாளன். இவன் ஆரம்பக் கல்வியை அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலையில் பயின்று வந்தவன், இளமைக்காலத்தில் கல்வியில் கணிசமாகவும், விளையாட்டில் மிகச்சிறந்தும் விளங்கினான். இவன் பாடசாலை இல்ல விளையாட்டுகளிலும் சரி, கழக விளையாட்டுக்களிலும் சரி தனது தனித்திறமையை வெளிக்காட்டினான். ...

Read More »