மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி பங்குனி மாதம் 15 திகதி 2009 வீரச்சாவு ! வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார். சிறிலங்கா அரசின் பயங்கரவாத படைகள் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இந்த மக்களுக்கான சிகிச்சைப் பணிகளை முதன்மையாகச் செய்து கொண்டிருந்த நிலையில் ...
Read More »லெப்.கேணல் அருணன் (சந்திரன்)
இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது…. காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்…. தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று. யாரெண்டு ...
Read More »லெப். கேணல் கில்மன்
தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர். ஒவ்வொரு கணமும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்த சிரமங்கள் ஏராளம். அவர்கள் சந்தித்த எந்தத் துயர்மலையாலும் துளிகூட அவர்களை நிலைகுலையச் செய்யமுடியவில்லை. ஒவ்வொரு வீரனின் உள்ளமும் உறுதியால் இழைக்கப்பட்டு தேசப்பற்றினால் உரம் பெற்றிருந்தது. எவ்வளவு கடினத்திற்குள்ளும் விடுதலைக்காக உழைக்கும் அவர்களின் உழைப்பு வீச்சுள்ளதாய் இருந்தது. அத்தனை வீரத்தையும் ...
Read More »நிறைந்த ஆழுமை…. மேஜர் துளசி
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் முதல்தர மாணவி, பின் நாட்களில் வேம்படி மகளிர் கல்லூரியின் க.பொ.த (உ/த) விஞ்ஞானபீட மாணவி, அந்த அமைதியான குகபாலிகா புலிகளோடு போனது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. வாய்திறந்து அதிகம் போசாத, ஆரவாரங்களில்லாத ‘றோசாக்கா’வினுள்ளிருந்த நாட்டுப்பற்றை எவராலுமே ஏற்கனவே அடையாளம் கண்டிருக்கமுடியவில்லை.அவரது நெருங்கிய தோழியின் தங்கையொருவர் 1989 இல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட செய்தி காற்றில் பரவியது. செய்தியை கேள்வியுற்ற குகபாலிகா தோழியிடம் ஓடிவந்து, “எனக்கு ...
Read More »மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி
எமது தலைவன் பூத்த மண்ணாம் வடமராட்சியின் ஒர் கிராமமான துன்னாலையில் பிறந்து வளர்ந்தவள் தான் ரத்தி. இவள் தனது கல்வியை வடமராட்சி வடஇந்து மகளிர் கல்லூரியில் கற்றுவந்தாள் இவள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தாள் இவற்றில் மட்டுமன்றி கலைநிகழ்ச்சிகளிலும் இவள் திறமை விளங்கியது. இவ்வாறாக இவளது கல்வி தொடர்கையில் எமது மண் அந்நியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட நினைவுகள் இவள் கண் முன் நிழலாடியது. இவளின் ஒன்றுவிட்ட அக்காவான கப்டன் லீமாவும் ...
Read More »தமிழ்ச்செல்வம்
வேகமாக நடந்துவரும் அந்தக்கைத்தடியின் சத்தம்… முற்கூட்டியே எம்மைத் தயார்ப்படுத்திவிடும் வாகனத்தின் உறுமல்… எவரிடமும் காணமுடியாத, தூர இருப்பவர்களையும் ஈர்த்தெடுத்து மகிழ்விக்கும் அந்த இனிய சிரிப்பொலி… தனது எத்தகைய துன்பங்களையும் கடந்து பிறருக்காக எப்போதும் மலர்ந்து கிடக்கும் அழகிய வதனம்… அவரைப் போலவே இனிமையான அருகிருக்கும் தோழர்கள்… எல்லாமே, எல்லோருமே இப்போதும் எங்கள் அருகிருப்பது போல…. உண்மையில் அப்படியொரு நாளாந்தம் அருகிலும், இல்லையென்றால் நினைவிலும் இல்லாமல் நாங்கள் ஒரு கணம்கூட இயங்கியதில்லை. ...
Read More »உறவுகளின் இழப்பால் உயிராயுதமாகத் துடித்தவள் – லெப்ரினன்ட் சாந்தா
எமது புரட்சிகரத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இளமைக் காலத்தில் உற்ற உறவுகளை மறந்து ஒரு சராசரி மாந்தன் அனுபவிக்கும் அத்தனை இன்பங்களையும் துறந்து தாயகத்தின் மீது கொண்ட தீராத பற்றினாலும் அரசியல், சமூக அக்கறையினாலும் பெண் விடுதலை வேண்டியும் பல்லாயிரக்கணக்கான தமிழீழப் பெண் போராளிகள் எமது தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களுடன் இணைந்து, அவரின் தலைமையினையும் வழிகாட்டல்களையும் உளமார ஏற்றுப் போராடி தம்முயிரீந்து மாவீரர்களாகியுள்ளார்கள். அவ்வாறே லெப்ரினன்ட் சாந்தாவும் சிறீலங்கா இராணுவத்தினரின் கொடும் ஒடுக்குமுறைகளாலும், திட்டமிடப்பட்ட இனவழிப்பினாலும் தனது குடும்பமும் மக்களும் இன்னலடைவதைக் கண்டு அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், இந்த ஒடுக்குமுறைகளிலிருந்து எம் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் தமிழீழப் பெண் போராளியாக இணைந்து எம் தலைவன் காட்டிய திசையில் விடுதலைப் பற்றுடன் களமாடி, தமிழீழ மண்ணுக்காய் தனையீந்து மாவீரராகினார்.
Read More »அண்ணன் அப்துல்லா வழியில் ஆகுதியான தங்கை திலகா
நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார். நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும். அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த ...
Read More »வலிசுமந்த நினைவுகள் – புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான்
17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு சூரியன் மட்டும் தன் கதிர் பரப்பி எழுந்து வந்தான். இரத்தமும், பிய்ந்து போன தசைத் துண்டுகளாகவும், வெடித்துச் சிதறுகின்ற இரும்புத் துண்டுகளாகவும் அழுது கொண்டிருந்தது நந்திக்கடல் விரிந்து கிடந்த அந்த பிரதேசம். திரும்பும் இடமெங்கும் அழுகுரல்கள். விட்டுப் ...
Read More »உணர்வு மிக்க ஊடகவியலாளர் கப்டன் செல்லப்பா
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களில் பெரும்பாலனோர் தாம் இருந்த நிலையிலிருந்து தமது பங்களிப்பைச் செலுத்திய காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட காலமாகும். இதில் சிலர் தங்களுடைய அர்பணிப்போடமைந்த முழுமையான பணியைச் செய்திருக்கின்றார்கள். இந்த வகையில் பார்க்கின்றபோது மட்டக்களப்பில் 1980 களில் பிரபல்யமான பத்திரிகையாளர்களில் ஒருவரான நித்தியானந்தன் அவர்களையும் முதன்மையாகக் குறிப்பிட முடியும். காலத்தால் அழியாத காவிநாயகர்கள் வரிசையில் மட்டு மண்ணில் பத்திரிகையாளானாக ...
Read More »