Home / ehouse (page 8)

ehouse

மாமனிதர் விக்னேஸ்வரன்

தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம் 08.04.2006 தாயக விடுதலையைத் தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்துக்காக அயராது உழைத்த உன்னத மனிதரை தமிழீழ தேசம் இன்று இழந்துவிட்டது. எமது தாயகத்தின் தலைநகரில் விடுதலைக்காக ஒளிர்ந்த ஒரு சுதந்திரச் சுடர் இன்று அணைந்து விட்டது. தமிழர் தேசியத்தின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் ஓயாது ஒலித்த ஒரு பெரும் குரல் இன்று ஒடுங்கிவிட்டது. தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் ...

Read More »

மாமனிதர் நடராஜா ரவிராஜ்

நடராஜா ரவிராஜ் (ஆனி 25, 1962 – கார்த்திகை 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் “ரவிராஜ் ...

Read More »

மாமனிதர் பேராசிரியர் துரைராசா

“இங்கு அஞ்சலி உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை கடவுளை வேண்டுகின்றேன்.” வதிரியில் பேராசிரியர் துரைராசாவின் இல்லத்தில் நடந்த இறுதிச்சடங்கின்போது, அக்கிராமத்தின் வயோதிபர் ஒருவர் கூறிய அர்த்தம் பொதிந்த வரிகளே மேலுள்ளவையாகும். பேராசிரியரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்கு – நற்பண்புகள் நிறைந்த அப்பேராசானை மக்கள் மதித்து ...

Read More »

லெப் கேணல் இசைவாணன்

தமிழீழ விடுதலைப்போராட்டம் பல போராளிகளின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டது. எங்கள் தேசத்தின் விடியலுக்காக தமது வாழ்க்கையினை தியாகம் செய்த எம் போராளிகள் ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் பெரும் தியாகத்தின் உச்சத்தை தொட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் சுரேன் என்றும் இசைவாணன் என்றும் அழைக்கப்படும் போராளியும் ஒருவராகிறார். தமிழீழ விடுதலைக்காக ஒரு காலை கொடுத்துவிட்டு அதற்கு மாற்றீடாக ஒற்றைச் செயற்கை காலோடு தன் வாழ்க்கையை தமிழீழ விடுதலைக்காக கொடுத்த உன்னதமான வேங்கை ...

Read More »

லெப்.கேணல் கமலினி

மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி பங்குனி மாதம் 15 திகதி 2009 வீரச்சாவு ! வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார். சிறிலங்கா அரசின் பயங்கரவாத படைகள் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இந்த மக்களுக்கான சிகிச்சைப் பணிகளை முதன்மையாகச் செய்து கொண்டிருந்த நிலையில் ...

Read More »

மாமனிதர் தில்லை ஜெயக்குமார்

“கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகச் செயற்பட்டு, எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு அயராது உழைத்த ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்துவிட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று சோகக்கடலிலே மூழ்கிக்கிடக்கிறது. திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் ஒரு பண்பான மனிதர். நெஞ்சில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர், பொதுநலத்தையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இனிமையான பேச்சும், எளிமையான ...

Read More »

லெப்.கேணல் அருணன் (சந்திரன்)

இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது…. காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்…. தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று. யாரெண்டு ...

Read More »

மாமனிதர் சிவநேசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனுக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான “மாமனிதர்” விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மதிப்பளித்துள்ளார். இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை: மாமனிதர் சிவநேசன் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் தேசியத் தலைவர்…..           தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 07.03.2008. தமிழீழ மண்ணையும் ...

Read More »

லெப். கேணல் கில்மன்

தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர். ஒவ்வொரு கணமும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்த சிரமங்கள் ஏராளம். அவர்கள் சந்தித்த எந்தத் துயர்மலையாலும் துளிகூட அவர்களை நிலைகுலையச் செய்யமுடியவில்லை. ஒவ்வொரு வீரனின் உள்ளமும் உறுதியால் இழைக்கப்பட்டு தேசப்பற்றினால் உரம் பெற்றிருந்தது. எவ்வளவு கடினத்திற்குள்ளும் விடுதலைக்காக உழைக்கும் அவர்களின் உழைப்பு வீச்சுள்ளதாய் இருந்தது. அத்தனை வீரத்தையும் ...

Read More »

நிறைந்த ஆழுமை…. மேஜர் துளசி

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் முதல்தர மாணவி, பின் நாட்களில் வேம்படி மகளிர் கல்லூரியின் க.பொ.த (உ/த) விஞ்ஞானபீட மாணவி, அந்த அமைதியான குகபாலிகா புலிகளோடு போனது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. வாய்திறந்து அதிகம் போசாத, ஆரவாரங்களில்லாத ‘றோசாக்கா’வினுள்ளிருந்த நாட்டுப்பற்றை எவராலுமே ஏற்கனவே அடையாளம் கண்டிருக்கமுடியவில்லை.அவரது நெருங்கிய தோழியின் தங்கையொருவர் 1989 இல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட செய்தி காற்றில் பரவியது. செய்தியை கேள்வியுற்ற குகபாலிகா தோழியிடம் ஓடிவந்து, “எனக்கு ...

Read More »