Home / ehouse (page 16)

ehouse

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்…

நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன். கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் ...

Read More »

லெப்.கேணல் தேவநேயன் (தர்சன்)

ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அந் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களின் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலும் தலைவர் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் கடற்புலிகளின் விநியோக அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில் அதாவது 01.05.1999 அன்று முல்லைத்தீவுக் கரையிலிருந்து லெப் கேணல் தர்சன் அவர்கள் தலைமையிலான படகுத் தொகுதி 110கடல்மைல்களுக்குச் சென்று கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தவேளையில், 55 கடல்மைல் தூரத்தில் இலங்கைக் ...

Read More »

லெப் கேணல் தியாகராஜன்/காவலன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதிகளில் ஒருவரான லெப் கேணல் தியாகராஜன்/காவலன் அவர்களின் வரலாற்று நினைவுகள்…! “விடுதலைப் பாதையில் புலனாய்வுப் புலியாய் போராடி புலனாய்வின் இரகசியம் காத்து தன்னைத் தானே அழித்து வீரகாவியமான போராளி” விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் பெரும்பாலான முக்கிய நடவடிக்கைகளில் பங்காற்றிய போராளி.ரணில் அரசுடன் மேற்கொள்ளபட்ட சமாதான உடன்படிக்கையின் ஏற்பட்ட அமைதி காலத்தில் லெப் கேணல் தியாகராஜன் யாழ்ப்பாணத்தில் நின்று செயல்பட்டவர்.அரசியல் செயல்திட்டங்களுடன் தனது வேவு பணிகளையும் ...

Read More »

வெளியில் தெரியாத ஆணிவேர் சுயாகி அண்ணா

சுயாகி அண்ணை என்றால் போராட்டத்துடன் அறியப்படாத ஒரு பெயர் ஆனால் எமது ஆயுதபோராட்டத்தை தாங்கி நிற்கும் ஆணிவேர் போன்றவன் என தலைவரால் பாராட்டப்பட்டவன் விடுதலைப்புலிகளின் படைக்கல பாதுகாப்பு அணியின் பொறுப்பாளர் இவனே. வெளியில் அறியப்படாத, ஏன் போராளிகளுக்குக் கூட பெரியளவில் அறிமுகமில்லாதவன். ஆரம்பத்தில் மணலாற்றுக் காடுகளில் தேசியத்தலைவருடன் இருந்த காலந்தொட்டு முள்ளிவாய்க்கால் வரை தலைவரோடு நின்று ஒரே பணியை செய்தவன்.அண்ணனின் நம்பிக்கைக்குரிய இரகசியக் காப்பாளன். அதனால்தான் 23வருடங்கள் போராட்ட வாழ்வும் ...

Read More »

கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப் கேணல் சாள்ஸ்…!

அன்றொரு காலம் … சிங்களக் கடற்படையின் படகுகளைக் கண்டால் எங்களது சாதாரண படகுகள் கடலில் நிற்காது, நிற்கமுடியாது. சண்டைகளுகென்றே தயாரிக்கப்பட்ட நேவிப்படகுகளின் வேகத்திற்கு, அவற்றில் பொருத்தப்படிருக்கின்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களின் தாக்குதலுக்கும் ஈடுகொடுக்க எங்களது சாதாரண படகுகளால் முடியாது என்பதால் துரத்தில் கண்டவுடனேயே ஓடி மறைந்துவிட வேண்டும், வேறு வழியில்லை. எங்களது படகுகளை அழிப்பது அவர்களின் இலக்கு என்பதுடன், கலைப்பது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவும் இருந்தது. ஆனால் இன்று அந்நிலை ...

Read More »

தமிழீழ விடுதலையின் வீச்சு கோபித்

வைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை மாணவன் கோபித் என்கிற தமிழனாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டபோது அவனுக்கு வயது பதினான்கு ஆரம்ப கல்வி மட்டுமே அவன் பயின்று இருந்தாலும் அழகாக எழுதுவதிலும் படங்கள் கீறுவதிலும் அவன் வல்லவனாய் இருந்தான். இளம் மாணவனுக்குரிய குழப்படிகளும் விளையாட்டுக் குணங்களும் நிறைந்திருந்தன, அவனுடைய தந்தை யாலும் பாடசாலை ஆசிரியர்களாலும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் பொறுப்புணர்வும் அவனுடைய செயல்களில் ஒரு நேர்த்தியை உருவாக்கி ...

Read More »

தலைவருக்கு தோளாய் நின்ற லெப். கேணல் பொன்னம்மான்!

தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா…. என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது. எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.   ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாகஈ தந்தையாக, ...

Read More »

1987 இல் 30 கலிபருடன் ஒரு தயார்படுத்தல்

1987 ஜனவரி 5ஆம் திகதி தேசியத்தலைவர் தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பி இருந்தார், பெப்ரவரி மாதம் முற்பகுதியில் சாவகச்சேரி முகாமில் மதிய உணவை முடித்துக் கொண்டு யாழ் வடமராட்சி பொலிகண்டி கொற்றாவற்றையில் அமைந்திருந்த முகாமுக்கு இம்ரான்,வாசு,அஜித்(பாம்பன்),பரன்,றொபோட்(வெள்ளை)ஆகியோருடன் டெலிக்கா வானில் வந்திருந்தார். அதே நேரம் பொன்னம்மான் உடன் மேலும் சிலர் முகாமுக்கு வந்திருந்தனர்.வடமராட்சி பொறுப்பாளர் தளபதி சூசை, வீமன் ஆகியோருடன் மேலும் பலர் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட கனரக இயந்திர ...

Read More »

ஆனந்தபுர முற்றுகைச் சமர் – போராளியின் பதிவு

[களத்தில் நேரடியாக நின்ற போராளியின் பதிவு-01] மார்ச்சு மாதம் [2009] 20ம் திகதிவரை ஆனந்தபுரம் சந்தைற்கு அருகாமையில் இருந்த எம்மை பச்சைபுல்மொட்டைற்கு நகரும்மாறு கட்டளை வந்து நாம் அங்கு சென்றோம் அந்த காலப்பகுதியில் இரணைப்பாலை செந்தூரன் சிலையடி வரை இராணுவம் வந்து ஆனந்தபுரத்தை கைப்பற்றுவதற்கான கடுமையான சண்டை நடைபெற்றுக்கொண்டுயிருந்தது. பச்சைபுல்மொட்டையில் எமது பின்தள வேலையை நாம் செய்துகொண்டியிருந்த ஐந்தாம்நாள் எமது அணியிலிருந்து தாக்குதல் நடவடிக்கைற்காக 40 போராளிகள் உள்வாங்கப்பட்டு பயிற்சிற்காக ...

Read More »