மூன்று முறிப்பு பப்பா லைனில் வவுனிக்குளம் அலைகரையில் கடல் புலிகள் மகளீர் படையணியின் ஒரு செக்சன் காதாம்பரி அக்காவுடன் நிலை நிறுத்தப்பட்டிருந்தார்கள்,அந்த லைனில் சுற்று சென்றிக்கு போனால் பெண் போராளிகள் பெரும்பாலும் பகலில் ஒருவர் காவல் காப்பார் மாறி மாறி மற்றவர்கள் உறக்குவார்கள் பின்னார் இரவில் மூவருமே முழிச்சு இருப்பார்கள்….
சாயம் காலம் என்றால் பாட்டு பாடிக்கொண்டு அங்கர் டின்னில் தேனீர் உற்றியும் சோடால் போத்திலில் சுடுதண்ணி விட்டு உடுப்பு அயின் பண்ணும் வேலையும் நடக்கும்….
லைனில் போராளிகள் போனால் அண்ணாக்கள் ஒரு பிளேண்டி குடிக்கலாமே என கேட்டு சிரட்டை அல்லது மெரிண்டா போத்தில வெட்டின கப்பில தருவார்கள்….
விஷேட வேவு போராளிகளும் அவர்கள் அருகில்தான் நிலைகொண்டிருந்தார்கள் ஜெய சுக்குறு நடவடிக்கையின் வேவு வேலைகளில் தீபக் மாஸ்டர் கூடவே ஒரு பக்கம் மட்டு அம்பாறை போராளிகள் மறுபக்கம் கடல்புலிகள் பெண்கள் ….
சாயங்காலம் ஆனால் எல்பியல் என்னும் எங்கள் போராளிகள் நிலையில் இருந்து முன்னோக்கி போய் நிலையெடுப்பதும்,எதிரியின் நடமாட்டம் அவதானிப்பதும் வேவுக்கு உள்ளே போகும் போராளிகள் திரும்பும் வரை காத்திருப்பதுமாக பொழுதுகள் கழியும்….
ஒருநாள் எதிரி கனகராயம்குளத்தில் இருந்து ஆட்லறி இழுத்திட்டு வந்து மூன்று முறிப்பு பகுதியில் வைத்து இரவில் தாக்குதல் செய்து விட்டு மீண்டும் இழுத்திட்டு போவதாக தகவல் கிடைக்கிறது….
அப்பொழுதுதான் ஆட்லறி நித்தம் வந்து போகுதா அல்லது கொண்டுவந்து சிலநாள் பாவிச்சிட்டு இழுத்திட்டு போறானா என்னும் தரவை எடுக்க சொல்லி பொறுப்பாளர் கட்டளை போட்டார்….
பெரும்பாலும் போராளிகள் ஏகே 47 ரைபிளுடன் இருக்கும் போது விஷேட வேவு போராளிகள் கையில் டாயஸ் 2இருக்கும் அது பட் கரையாக மடிக்கலாம்,அதோட 81வன்,சிங்கபூர் டொங்கான் என ஜக்கெட் கோல்ஷர் என கொஞ்சம் பார்க்க கலஷா இருப்பார்கள்….
இவற்றுடன் போகும் போது மற்ற படையணி போராளிகளுக்கு புரியும் இவர்கள் மொமாண்டே பயிற்சி பெற்றவர்கள் என்பதால் தனி மரியாதையிருக்கும்…..
இவ்வாறுதான் ஒருநாளில் ஆட்லறி தரவு எடுக்க ஏழு பேர் கொண்ட அணி மூன்றுநாள் உள்ளே நிற்கும் உணவுடன் செல்ல தயாராகுறது…
அதில் மறைவாணனும் ஒருவன் அடிக்கடி கடல்புலி போராளிகள் லைனில் இருந்தே உள்ளே போவது வழமை,அவனுக்கு கடும் கூச்ச சுபாவம் போராளிகள் சும்மா வம்புக்கு இழுப்பார்கள் இவன் கடுமையா வெட்கப்படுவான் படு பம்பலா போகும் சிலவேளைகளில்….
அதில் இருந்து கதாம்பரி அக்காவுடன் உரையாடிவிட்டு இப்ப போய் இரண்டு மூணுநாள் கழிச்சுத்தான் உள்ள வருவம் வரும்போது கோட் தெரியாது கூப்பிட்டால் வந்து கூட்டி போங்க என பொறுப்பு சொல்லிட்டு நகர ஆரம்பிக்கிறார்கள்….

பெண்பிள்ளைகள் லைனில் முன்னாடி கண்ணிவெடிகள் பெரும்பாலும் வைக்கப்படிருக்கும் அவர்களுக்கு தான் தெரியும் மைன்ஸ் இல்லாத பாதை….
உள்ளே போய் மாங்குளம் சின்னக்கிணத்தடி வழியாக பாதையை கடக்கும் போது எதிரி கண்டுவிட மோதல் தொடங்கியது….
ரோட் கடத்தவர்கள் அந்த பக்கமும் கடக்காதவர்கள் இந்த பக்கமுமாக பிரிய வேண்டிய சூழல் வந்திட்டு, கும்மிருட்டில் ஆளையாள் பார்க்க முடியாத சூழலில் கவர் கொடுக்குறம் கடந்து வாங்கடா என நிலையெடுத்து சண்டை செய்ய அருகில் இருந்து இராணுவம் பரா வெளிச்சம் அடித்து குமிய தொடங்கியது….
நிலமை பிழையென ஐந்து பேரும் பின்னோக்கி நகர அந்த பக்கம் போன மறைவாணனும்,பகலவனும் என்ன நடந்த என தெரியாது பொறுப்புக்கு தகவலும் சொல்ல முடியாமல் வந்திருவாங்கள் பிரிச்சு போனால் இவ்விடத்தில சந்திக்க வேணும் என்னும் ஒரு நிலையம் இருக்கு அங்கு காத்திருக்கிறார்கள்….
இராணுவம் உள்ளே வந்தவர்கள் எங்கேயென டார்ச் லையிட்,பரா லையிட்,வாகன லையிட் என போட்டு தேடிட்டு இருக்கு,சகட்டு மேனிக்கு சுட்டுக்கொண்டும் இருக்கு….
நேரம் விடிகாலை நோக்கி நகர தொடங்க இருந்த இடத்தில் இருந்து இன்னும் பின்னோக்கி வரவேண்டிய சூழல் பொறுப்புக்கு அறிவித்து விட்டு நிலையை மாறுவம்,காலை பொழுத அங்க கழிச்சிட்டு இரவு கொஞ்சம் தள்ளி போய் கடப்பம் என்னும் பிளான் போட்டு பின்னகர்த்து வந்தார்கள்….
ஆனால் எதிரி தேடுதலை விடவில்லை அந்த பக்கம் மதியம் கடத்து பெரும் துப்பாக்கி சத்தமும் குண்டு சத்தமும் கேட்கிறது…
கண்டுட்டாங்கள் போல அடிபாடு நடக்கு அடிச்சிட்டு அந்த பக்கமா போனால் அம்பகாம லைனில ஆவது ஏறுவாங்கள்,நின்று சண்டை செய்ய மாட்டாங்கள் அடிச்சிட்டு ஓடி வருவாங்கள் என நினைத்தபடி பொறுப்புக்கு தகவல் சொன்னார்கள் சக போராளிகள்….
பொறுப்பு செட்டில் இருப்பதால் உள்ளே நடக்கும் உரையாடல் ஒட்டுகேட்பார்கள் இரண்டு புலி உள்ளே நிற்கு தேடிட்டு இருப்பதாக அங்கு அவர்கள் தொலைதொடர்பில் பேசிட்டு இருக்குறாங்கள் என்றால் ஆதனால் அவங்கள் இன்னும் மாட்டல்ல ….
இரவு நெருக்கியது அதில் இருந்து பக்கவாட்டாக ஒரு கிலோமீற்றர் நகர்த்து இராணுவ நிலையினை அவதானிச்சு பாதையை கடத்து போகவும்,அவர்களை தேடவும் தயாராகும் போது….
தொலைத்தொடர்பு அழைக்கிறது நீங்கள் பின்னுக்கு வாங்க அங்க சிக்கல் ஆகிட்டு என்பதாக,அதிர்ச்சி செய்தியாக இருந்தது என்னாச்சு அவர்களை எதிரி பிடிச்சிட்டானா ஏன் அழைக்கிறார்கள் வர சொல்லி என்னும் பல கேள்வியுடன் தளம் திருப்புகிறார்கள்…
காலையில் செய்தி வருகிறது செஞ்சிலுவை சங்கம் ஊடாக இரண்டு போராளிகள் உடல்கள் மாங்குளத்தில் பரிமாறப்படுகிறது….
முதல்நாள் சண்டை செய்துகொண்டு எதிரியின் கொமாண்டோ கம்பி வேலியை கடக்கும் போது அதில் சிக்கி வீரச்சாவை அடைத்தார்கள்….
எப்பவும் சிரித்த முகம் எப்ப உள்ளே போகும் போதும் உயிரோடு எல்லாம் மாட்ட மாட்டன் கிளிப் இழுப்பன் காயப்பட்டாலும் என சொல்லுவான்…
ஒவ்வெரு இரவும் ஓவ்வெரு போராளிகளும் வேவுக்கு போகும்போது ஜெயசுக்குறு வெற்றிக்கு அடித்தளமானார்கள்…
விசுவமடு குளத்துக்கு பின் உள்ள பயிற்சி பாசறையில் தான் பயிற்சி எடுத்தான் லையின் கட்டி குளிக்க வரும் போது சொல்லுவான் இப்படியே சந்திக்கு போனால் தன் வீடு என ….
அந்த பட் மடிச்சு விட்டு டாஸ் 2வை போட்டுக்கொண்டு அவன் நடக்கும் பாணி அப்படியிருக்கும்,டேய் உனக்குத்தான் காலில் காயம் இல்லையே பிறகு ஏன் கெந்தி நடக்கிறது என்றால் அதுதான் அணில் நடை என்பான் சனம் அப்பத்தான் இயக்கம் பொடியன் ஆளுக்கு சண்டையில காயம் காலில் என நினைக்கும் என கலாய்ப்பான்….
ஒவ்வெரு நினைவும் பாரமாக ஒரு மூலையில் அழுதிட்டு இருக்குறது வாழ்வு.
போராளியின் குறிப்பேடு
EelamHouse A place for Eelam history documents