Home / பிற ஊடகங்கள் / பகிரப்படாத பக்கங்கள் / தண்டனையில் எனக்கும் பங்கு….

தண்டனையில் எனக்கும் பங்கு….

விடுதலை புலிகள் அமைப்பில் பல கட்டுபாடுகளும் ஒழுங்கங்களும் கண்டிப்புகள் இருந்தமையால் உலகம் வியக்கும் தமிழீழ மரபியல் இராணுவமாக வளர்ந்தது யாவரும் அறிந்த விடயம்…

எம் அமைப்பில் சில தவறுகளுக்கு முன்னுதாரணமாகவும் இனிமேல் அந்த பிழைகள் ஏற்படாதவாறு திருத்திக் கொள்ளப்படவும் சில தண்டனைகள் வழங்குவது வழமை….

பொறுப்பாளரால் சில தண்டனைகளை வழங்குவதும் குறும்புத் தனத்துடன் போராளிகள் செய்து முடிக்கும் நிகழ்வும் ஓர் சுவாரஸ்யம் அதை அனுபவித்தவர்கள் மனங்கள் இதை படிக்கும் போது சில ஞாபகங்கள் வரலாம் ….

அப்படியாக ஓர் சம்பவத்தை பகிர்கிறேன்….

இம்ரான் பாண்டியன் படையணியில் ( பாதுகாப்பு பிரிவில் ) இருந்து கடற்புலி பாசறைக்கு சில பயிற்சிகளுக்காக சில போராளிகள் அதில் கணணிப்பிரிவிற்கு பொறுப்பான தீபன் ( இவரே சாள்ஸ்சுக்கு வலது பக்கத்தில் ) மற்றும் 2000ம் ஆண்டு அப்பாச்சி கனரக ஆயுதத்தால் டோறா அடித்த தமிழரசன், மணிவண்ணன் உட்பட பல போராளிகளுடன் சாள்ஸ் கூட வந்திருந்தார், அதிலிருந்த போராளிகளுக்கு சாள்ஸ்சும் மிக நீண்ட நாள் நெருக்கம்….

நீச்சல், மற்றும் இயந்திரங்கள் என நீடித்த பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது கடல்சார் சண்டைப்படகு இயந்திரத்தை கற்பிக்கும் பொறுப்பு விமல் மாஸ்ரரிடம் வழங்கப்பட்டது. அவரும் தன் கடமையை செய்தார்.

இயந்திரத்தை கற்பித்து அதை ஒரு நாள் முழுவதும் எல்லோரும் ஒட்டிப் பார்த்து உங்களுக்கு தெரியாத விடயங்களை பின்பு கேளுங்கள் பின்பு கரைய படகு ஏறியவுடன் நண்ணீரில் இயந்திரத்தை சுத்திகரித்து விட்டு விடுங்கள் அல்லது உப்பு பிடிக்கும் என கூறிவிட்டு சென்றார்.

இவர்களும் கடலில் ஒட்டி பார்த்து மாலை ஆனதும் படகு கரையில் ஏற்றப்பட்டு இவர்களின் கொட்டிலுக்கு அண்மையில் விடப்பட்டது. இவர்கள் நண்ணீரில் இயந்திரத்தை சுத்திகரிக்க மறந்து விட்டார்கள். அது இயந்திரத்தின் மேல் பாகங்கள் உப்பு படிந்து இருந்தது.
( பெற்றொல் இயந்திரம் என்பதால் அவதானம் மிக முக்கியம் – தொடர் இலத்திரனியல் இணைப்புக்கள் உள்ளமையால் )

அன்று நடந்த தவறுக்கு….
நீண்ட நாளின் பின் கடலில் என்பதினாலும் கடல்காற்றின் சுவாசமும் கடலில் இருந்து கரை ஏறினால் சூடு மணலின் வாட்டும் வெயிலின் உடல் களைப்பு அடைய செய்தமையும், கடல்நீரில் விழுந்து குளித்து எழும்பி வந்தமையும் அது மேலும் பசியை அதிகரித்தமையுமே காரணமாக உழலில் மேலும் களைப்பை அதிகரித்து சோர்வடைய செய்தது …..

விமல் மாஸ்ரர் வந்து இயந்திரத்தை பார்த்தது விட்டு அனைவரையும் அழைத்து அவர்களின் பிழைகளை கூறினார் பின்.
இயந்திரத்துக்கு அதனால் ஏற்படும் விளைவுகளை விளங்கபடுத்தினார்.

பின்பு தங்கள் செய்த பிழைக்கு என்ன தண்டனை செய்ய என அனைவரும் ஒருமித்து கேட்டார்கள்.

இயந்திரந்திரத்தில் படிந்த உப்பை நாவினால் தொட்டுக்கொள்ளவும் என கூறினார்.

பின்பு ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து ஒவ்வொருவராக செல்லும் வேளை சாள்ஸ்சும் இடையில் நின்றார்.

அதைப் பார்த்த விமல் மாஸ்ரர்

சாள்ஸ் நீங்கள் இங்கு வாருங்கள் என அழைக்க…

சாள்ஸ்சும் சென்றார்,

நீங்கள் வேண்டாம் என கூறினார்.

மன்னிக்கவும், நானும் அந்த தவறுக்கு உரியவன் நானும் அந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றான்.

வேண்டாம்…. சொன்னா கேளுங்கள் என்றார் விமல் மாஸ்ரர்

அப்போது சாள்ஸ் அப்படியானால் அவர்களுக்கும் ஏன் தண்டனை வழங்கப்படுகிறது…?

மெளனமாக இருந்தார் விமல் மாஸ்ரர்….

( ஏனைய நண்பர்கள் போல் பழகி கூட வந்த போராளிகள் ” தம்பி ” என்றுதான் செல்லமாக அழைப்பர் சாள்ஸை காரணம் ஓரிரு வயது குறைந்தவன் சாள்ஸ்.. )

தம்பி நீ இரு, நாங்கள் செய்கிறோம் என்றனர்.

நான் தண்டனை செய்யாமல் இருந்தால் அப்பா கூட என்னை மன்னிக்கமாட்டார்
தண்டனையில் எனக்கும் பங்கு இருக்கு ஆதலால் நானும் சென்று தண்டனையைப் பெறுவேன் என வழங்கபட்ட தண்டனையை அவனும் ஒருவனாய் ஏற்றான்…

பின் தண்டனை முடிந்து இயந்திரத்தை சுத்திகரித்து கையளித்தார்கள் அனைவரும்….

மீண்டும் ஒரு நாள் கழித்து வந்த போராளிகளுடன் தன் பாசறை நோக்கி பறந்து சென்றான்.

இதுதானா தேசியத்தலைவர் புதல்வன் என கடற்புலிகள் போராளிகள் மத்தியில் பேச்சுக்கள் அந்த வட்டுவாகல் முதல் சாலை வரை உலாவந்தன…

இன்னோர் காவியத்துடன் சந்திக்கும் வரை …..

– இசைவழுதி

About ehouse

Check Also

போராளியின்யின் குறிப்பேட்டிலிருந்து…

இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. ...

Leave a Reply