Home / பிற ஊடகங்கள் / பகிரப்படாத பக்கங்கள் (page 2)

பகிரப்படாத பக்கங்கள்

உள்ளிருந்து ஒருகுரல்

போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்பபுதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்னோனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்… முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக் கிடந்தது. வேவுப் பணியை ஒத்த முதன்மையான பணி அது. ...

Read More »

நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே….

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும். அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து கிடக்கின்றன..! அவர்களோடு, ...

Read More »

காலமெழுதிய காவியம்

பகலவன் மேற்குவானில் பவனி வந்து கொண்டிருந்தான். போராளிகள் திட்டமிட்ட இராணுவமுகாம் தாக்குதலுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிகளை கட்டியிருந்தது. தங்களுக்குத் தரப்பட்ட இராணுவமுகாம் பகுதிகளை குறித்த நேரத்தில் பிடிக்கவேண்டுமென்ற உத்வேகம் எல்லோர் மனங்களிலும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவன் தன்னிடமிருந்த சலனப்படக் கருவியை சரி பார்த்துக் கொண்டிருந்தான். இராணுவமுகாம் தாக்குதலைப் பதிவுசெய்வதே அவனுக்குத் தரப்பட்ட பணி. புகைப்படக் கருவியை கையிலெடுத்ததும் கடந்தகால நிகழ்வொன்று நினைவில் மோதி சிரிப்பூட்டியது. ...

Read More »

மாஸ்ரரை அனுப்புங்கோ….

போர்க்களமத்தில் ஆயிரம் சோதனைகளும், வேதனைகளும் இருந்தும் அத்தனையையும் ஓர் புன்னகைக்குள் அடக்கி சாதனைச் சிகரமாக உயந்தவர்கள் எங்கள் மாவீரச் செல்வங்கள். களவாழ்விலும், ஓர் பணியிலும் அந்த சூழலில் போராளிகளின் செயலில் வார்த்தைகளும் உதிரும் நகைச்சுகைவளுக்கு பஞ்சமிருக்காது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி கண்டி வீதி – இத்தாவிற் போர்க்களத்திற் சண்டைகளுக்குள் ஈடுபட்டிருந்த போது…. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியான லெப்.கேணல் ராஜன் (ராஜசிங்கம்) அண்ணா அவர்கள் அங்கு ...

Read More »

வாழ்விலொரு வழிகாட்டி

சண்டைக்குச் சென்ற படகுகள் கரை திருப்பியிருந்தன. அர்ப்பணம் நிறைந்த வெற்றியைச் சுமந்தபடி கடலலைகள் கரைதழுவிச் சென்றன. விழுப்புண்ணடைந்த போராளிகளைச் சுமந்தபடி வந்த படகு நோக்கி விரைவாய் ஓடினேன். அவன் அணியத்தில் படுத்திருந்தான். அவனின் வயிற்றுப் பகுதி குருதித்தடுப்புப் பஞ்சணையால் கட்டப்பட்டிருந்தது. குருதித்தடுப்புப் பஞ்சணையையும் மீறி குருதி கசிந்திருந்தது. தம்பியாய் பழகியவனின் நிலைகண்டு அதிர்ச்சியுற்றபோதும் அடுத்த கணம் என்னை நிலைப்படுத்திக் கொண்டேன். விழுப்புண்ணடைந்த பெண் போராளியைப் பக்குவமாய் இறக்கி ஊர்தியில் ஏற்றினோம். ...

Read More »

நினைவுகள் வேகமாக… (சிறுகதை)

(இந்தக்கதையை எழுதிய போராளி காந்தா இறுதியுத்தத்தில் மரணித்துவிட்டார். அவரது போராளிக் கணவரும் இன்றுவரை இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் எதுவும் தெரியாது. காந்தாவின் சிறு குழந்தைகள் தற்போது உறவினர் ஒருவரின் ஆதரவில் வாழ்கிறார்கள். மாவீரர் காந்தா எழுதிய கதையிது) அந்த வரைபடம் எனது கோல்சருக்குள் மடித்தபடி பல நாளாய் கிடக்குது. எனக்கு அதைப் பார்க்கவேண்டுமெண்டா அதைப்பயன்படுத்திதான் மோட்டார்களுக்கு இலக்கின் வகை சொல்ல வேணுமெண்டோ அவசியம் இல்லை. இப்பதான் நிஸ்மியாக்காவந்தவா. வன்னியெண்டபடியால ...

Read More »