Home / மாவீரர்கள் (page 10)

மாவீரர்கள்

லெப். கேணல் அமுதாப்

“அமுதாப்” என்ற பெயரைக் கேட்டாலே பல உணர்வுகள் மனதில் பொங்கி எழும். பகைவனும் பதறியடித்து பயந்து சாவான். உயிர் இருந்தும் பிணமாய் போகும் எதிரியவன் உயிரும் உடலும். அவ்வளவு வீரமும், தீரமும், நேர்மையும், போரியல் நுட்பமும், களமுனை அனுபவமும், போராட்ட உணர்வும், ஈழத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற தணியாத தாகமும், தலைவர் மீது ஆழமான நேசமும் ,தமிழீழ மக்களில் பாசமும் ,உடனிருக்கும் போராளிகளின் நலனை பேணுதலும் இப்படி எத்தனை எத்தனையோ ...

Read More »

தமிழீழ விடுதலையின் வீச்சு கேணல் நாகேஸ்

மட்டக்களப்பு புல்லுமலையை பிறப்பிடமாகக் கொண்ட கேணல் நாகேஸ் 1985-86 காலப் பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். ஆரம்பகாலத்தில் லெப்.கேணல் றீகன் அவர்களின் அணியில் தனது சமர்க்களப் பணியை ஆரம்பித்தார். காலங்களில் சிறப்பாக செயல்ப்பட்ட அவர் இந்திய ஆக்கிரமிப்பு படைகளுக்கெதிரான யுத்தம் ஆரம்பமானபோது புல்லுமலைப் பகுதி விடுதலைப் புலிகளின் முகாமின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார். இந்தக் காலகட்டத்தில் அவரின் தலைமையில் இந்திய,சிறிலங்கா படையினருக்கெதிரான பல வெற்றிகரத் தாக்குதல்கள் ...

Read More »

லெப்.கேணல் குட்டிசிறி மோட்டார் படையணித் தளபதி கேணல் அமுதா

பெண்ணாக பிறந்து புலியாக மாறி புயலாக எழுந்து பல களம் கண்ட வீரத் தளபதி இவள். ஆனந்தபுரத்தில் மோட்டார் அணியின் பெண் போராளிகளை வழிநடத்தி களத்தில் காவியமானவள். அமுதா பயிற்சிமுகாம் முடிந்த கையோடு கனரக ஆயுதப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அங்கு 60mm மோட்டார் அணியில் ஒரு காப்பாளராக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே எனக்கு அறிமுகம். நிறத்த மெல்லிய நெடுத்த அவளது தோற்றம் கனரக ஆயுதத்திற்குப் பொருத்தமில்லாதவாறே பார்ப்பவர்கள் கணிப்பிடுவர்.முகத்தில் என்றும் அமைதி ...

Read More »

லெப். கேணல் அருணன்

அருணாண்ணை வீரச்சாவு அதை நம்பவா…..? இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது…. காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்…. ...

Read More »

செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்

மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட யாழ்.குடாநாட்டின் வெள்ளலைகள் கரைதழுவுகின்ற வடமராட்சிக் கிழக்குப்பிரதேசத்தில் மருதங்கேணி எனும் நெய்தல் நிலமண்ணில் 1973-ம் ஆணடு பெப்ரவரி மாதத்தில் தங்கவேலு காந்திமலர் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தான் சுதரதன். அம்மா அப்பா மற்றும் இரண்டு சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்ட அளவான குடும்பம். சுதரதனை எல்லோரும் செல்லமாக சுதன் என்றே அழைத்தனர். சுதன் தனது மழலைப் பருவத்தைக் கடந்து தனது பள்ளிப் படிப்பில் ஆரம்பக் கல்வியை மருதங்கேணி ...

Read More »

புலிமகள்…

அங்காங்கே சில்லிட்டு கத்திக் கொண்டிருக்கும் சில்வண்டுகளின் ரீங்காரத்தையும் சின்ன சின்ன பொட்டுக்களாய் மினுமினுக்கும் மின்மினிப் பூச்சிகளின் சிற்றொளியையும் ஊர்ந்து திரியும் பாம்புகளையும் பூரான்களையும் தாங்கி நிமிர்ந்து நின்றது அந்த காட்டுப் பூமி. அவ்வப்போது எட்டிப் பார்க்கும் விலங்குகள் தண்ணீருக்காக அந்தக் காட்டோரத்தில் உள்ள குளக்கரை நோக்கி படையெடுத்து வருவது எல்லாம் இப்போது இல்லை. சிங்களத்துடனான எம்மவர்களின் மோதல்களும், ஆக்கிரமிக்க வந்து கொண்டிருந்த சிங்கள வல்லாதிக்கத்தின் வெடிபொருட்களின் வெடிப்பின் தாக்கமும் அவற்றையும் ...

Read More »

பொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய் லெப். சைமன் (ரஞ்சன்)

தென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களுரின் தொடரூந்து நிலையத்தில் சுமார் நூறுவரையிலான விடுதலைப்புலிப் போராளிகள் இராணுவப் பயிற்சிபெறும் நோக்கோடு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தனர். அப்போது ரஞ்சன் தனது போராளி நண்பர்களை நோக்கி இந்த பெங்களூர் நகருக்கு நான் அப்போதே வரவிருந்தேன். வானூர்தி ஓட்டியாக பயிற்சி பெறுவதற்கு இங்குள்ள நிறுவனத்தில் அனுமதியும் பெற்றிருந்தேன். ஆனால் வரவில்லை. இன்று, இங்கு நிற்கின்றபோது அதையும் எண்ணிப்பார்க்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனெனில் ...

Read More »

கப்டன் கலைமதி – காணவந்த தாய் கண்ட நினைவுக்கல்

யாழ். மாவட்டம் உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்டவர் சுதாஜினி. 1991 – 1992ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கலைமதியாக இவர் பல வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். 18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ‘ஓயாத அலைகள் 01’ நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கலைமதியின் உறவினர்கள் அன்று இராணுவ ஆக்கிரமிப்பு ஊர்களினுள் இருந்தமையால் உறவினர்களுக்கு வீரமரண செய்தி அறிவிக்கப்படாமல் தமிழீழ மாவீரர் பணிமனை கிளிநொச்சி கோட்டத்தின் ஊடாக இறுதி ...

Read More »

நினைவுகள் வேகமாக… (சிறுகதை)

(இந்தக்கதையை எழுதிய போராளி காந்தா இறுதியுத்தத்தில் மரணித்துவிட்டார். அவரது போராளிக் கணவரும் இன்றுவரை இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் எதுவும் தெரியாது. காந்தாவின் சிறு குழந்தைகள் தற்போது உறவினர் ஒருவரின் ஆதரவில் வாழ்கிறார்கள். மாவீரர் காந்தா எழுதிய கதையிது) அந்த வரைபடம் எனது கோல்சருக்குள் மடித்தபடி பல நாளாய் கிடக்குது. எனக்கு அதைப் பார்க்கவேண்டுமெண்டா அதைப்பயன்படுத்திதான் மோட்டார்களுக்கு இலக்கின் வகை சொல்ல வேணுமெண்டோ அவசியம் இல்லை. இப்பதான் நிஸ்மியாக்காவந்தவா. வன்னியெண்டபடியால ...

Read More »

இரு நாட்டு கடற்படையுடன் போரிட்ட லெப். கேணல் தர்சன்

“ஜெயசிக்குறு” இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அத்தாக்குதல் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தேசியத் தலைவர் அவர்களின் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலும், ஆலோசனைக்கும் அமைவாகவும் கடற்புலிகளின் விநியோக அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில் 01.05.1999 அன்று முல்லைத்தீவுக் கரையிலிருந்து லெப். கேணல் தர்சன் அவர்கள் தலைமையிலான படகுத் தொகுதி 110 (N.M) கடல்மைல்களுக்குச் சென்று கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டுவரும் வேளையில் 55 (N.M) கடல்மைல் தூரத்தில் சிறிலங்கா ...

Read More »