Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / மேஜர் ஈழமாறன்& மேஜர் கஜன்

மேஜர் ஈழமாறன்& மேஜர் கஜன்

அந்தத் தாயவளுக்கு இவர்களும் ஓர் பிள்ளை, இவர்கள் அரசியலில் பணிகள் தேசத்தின் விடியலின் தாகத்துடன் பயணித்த போதும் இவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தவள் ஓர் போராளியின் தாயவள்!!!

அன்று கூறினார் அந்தத் தாய்…..
என் கருவில் சுமக்கவில்லை ஆயினும் தினம் தினம் என்னை அம்மா என்று அழைத்தவர்கள் இவர்கள் அதனால் என் உள்ளம் மகிழ்ந்தது…..
காலத்தின் தேவை உணர்ந்து இன்று வரலாறாக…, மாவீரர் நடுக்கற்களாக….., ஏனோ என் நெஞ்சம் அவர்களின் பிரிவை தாங்க முடியவில்லை என விம்மினாள் அந்தத் தாய்.

ஆயிரம் வீரர்களின் நினைவைத் தாங்கி தான் உயிரற்ற உடலாக இன்றும் என அந்தத் தாய்.

தான் பெற்ற பிள்ளைகளுக்கு இவர்கள் உடன்பிறவா சகோதரகளாக………..

அந்தத் தாயின் பிள்ளையும் அணையாத தாகத்துடன், இவர் பதித்த காலடிச் சுவடுகள் பார்த்து தேச விடியல் நோக்கி …………………

சமாதான மேகம் தமிழீழத்தில் பரவிய காலம். பாதை திறப்புடன் யாழ்மாவட்டத்தில் அரசியல் பணிக்காக போராளிகள் சென்ற வேளை, அரசியல் பணிகள் யாழ்மாவட்டத்தில் கிராமம், ஊர்கள் என பரந்துவிட்டு முன்னெடுக்கப்பட்டு செல்கின்ற வேளை,

ஆயிரம் மாவீரர்களின் தியாகங்களிற்கு அடித்தளம் இட்ட தீவகத்தில் போராளிகளின் பாதம்பட்டு ஓர் வரலாற்று பதிவாகிறது.

அங்குதான் பல அரசியல் போராளிகளுடன் மேஜர் ஈழமாறனும், மேஜர் கஜனும் சில பின்னைய நாட்களில் தங்கள் ஈகத்தால் வரலாறான மாவீரர்களும் அதில் இருந்தனர்.

தமிழீழத்தின் யாழ்மாவட்டத்தில் தீவகம் பகுதியில் வேலணை முதல் மிகத் தொலைவில் அமைந்த நெடுந்தீவு முதல் இவர்களின் பாதம் படாத இடமும் இல்லை, அங்குதான் இவர்களின் அரசியல் பணிகளும் சிறகடித்துப் பறந்தது.

மேஜர் ஈழமாறன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்தான். கிழக்கு மாகாணத்தில் தமிழீழ வரலாற்றில் பதிந்த துயர் நிகழ்வுகள், இன அழிப்பின் கோரங்களுக்குள் அவனின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது, பின் விடுதலை ஒன்றே வாழ்வாக்கி விடுதலையின் பாதையில் இணைகிறான். ஏற்கனவே தன் தமையனும் அமைப்பில் இணைந்து இம்ரான் பாண்டியன் படையணியில் கடமை புரிந்த வேளை தன் திறமையினால் இம்ரான் பாண்டியன் படையணியில் உள்வாங்கப் படுகிறான். அங்கும் அவனின் பணி விரிந்து அதிலிருந்த படி பல களவாழ்வும் சென்று வந்தான்.

திறமையான பாட்டுக்காரன், பேச்சுக்காரன் எந்தபெச்சிலும் ஓர் விடுதலையின் தாகம், தேசியம் பற்றியும், தேசியத்தலைவர் பற்றியும் இருப்பதனால் அனைவரயும் அவனில் ஓர் நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், அன்பைச் சொரியவும் வைக்கும்.

பின்பு அப்படியே நகர்ந்து சமாதான காலத்தில் அரசியல் பணிக்காக தெரிவாகி யாழ்மாவட்டம் செல்கிறான்.

மேஜர் கஜன் யாழ்மாவட்டத்தில் பிறந்தாலும், பல போரியல் வாழ்வுக்கு எம் மக்கள் கலந்து பல வரலாற்று இடப்பெயர்வுகளை சந்தித்த நேரம் கஜனின் குடும்பமும் அப்படி சொல்லனாத்துயர்களை அனுபவித்து பின் இரணைமடு கிளிநொச்சி மாவட்டத்தில் தான் நிரந்தரமகா வசித்து வந்தது.

கஜன் வீட்டில் சகோதரிகள் மத்தியில் பிறந்தமையால் அவனின் குடும்பமே அவனில் பாசமாக இருந்தது. ஆயினும் அவனின் குடும்பம் தாய்மண்ணின் விடியலின் போராட்டத்தில் பெரும் ஆதரவை தெரிவித்து அதற்குள் தம்மை ஈடுபடுத்திய வண்ணம் தான் இருந்தார்கள். கஜனின் சகோதரி ஓர் காலிழந்த போராளியை மணந்து கொண்டார். அந்தப் போராளியும் ஓர் மாவட்ட மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக பொறுப்பாளராக இருந்தவர். கஜனின் தேற்றம் சிறுவயதைப்போல் இருப்பான். அவனின் புன்சிருப்பு அனைவரையும் கவரும், அவனின் மெல்லிய குரலில் கதைக்கும் போதும் ஓர் நிகழ்வில் பாடும் போதும் அவனின் பக்கம் திருப்பும்.

இப்படியாக நகர்ந்த இவனின் போரியல் வாழ்வுகள் சமாதான காலத்தில் அரசியல் பணிக்காக தெரிவாகி யாழ்மாவட்டம் செல்கிறான்.

யாழ்.மாவட்ட அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளராக இருந்த கண்ணன் அவர்களின் தலைமையில் நெடுந்தீவிற்கு அரசியல் பணிக்காக சென்ற போராளிகள் சென்றனர். அது கண்ணன் அவர்களைப் பெற்ற ஊரும், கண்ணன் அவர்கள் போரில் தன் காலை இழந்திருந்தால் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்ணன் அவர் தான் அவ்வேளை நெடுந்தீவு அரசியற் துறைப் பொறுப்பாளராக தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக பணியை ஏற்று அன்று நெடுந்திவில் ஆவலுடன் காத்திருந்த வரலாற்றுப் பயணத்தில் நெடுந்தீவில்1991ம் ஆண்டு வரலாற்றுக்கு பின் அன்று புதுப்பித்தனர்.

அன்று குறிகட்டுவான் பாலத்தில் காத்திருந்த போராளிகள் அதில் ஈழமாறனும், கஜனும் சில வரலாறுகளை உரைத்த வண்ணம் இருந்தனர். அதில் குமுதினியைப் பற்றிய படுகொலை வரலாறுகள் அதிலே தாம் இன்று காலத்தின் கடமை ஏற்று அந்த தீவிற்கே செல்கின்றோம் என….

”இதுதான் குமுதினி…. இதில்தான் நேவிக்காரன் எம் உறவுகளை படுகொலை செய்தான் என கஜனின் குரல் அதில் பதிவாகிறது…”

நெடுந்தீவு மக்களுக்கு அன்று ஓர் விழாக்கோலம் தான் அதில் பல பல வியக்கத்தக்க வரவேற்புக்கள் நடந்தது. இன்று யாவும் காற்றில் கலைந்த கோலமாகி போனதும் ஏனோ?

நெடுந்தீவில் அரசியல் பணிகளுடன் நாட்கள் நீள்கிறது. ஈழமாறன் – கஜனை அங்கு வாழும் ஆதரவாளர்கள் முதல் உறவுகள் வரை தன் வீட்டுப் பிள்ளைபோல் கருதி பழகி வந்தார்கள்.

ஈழமாறனின் நகைச்சுவைப் பேச்சும், கஜனின் தோற்றமும் பெரியோர்கள் முதல் சிறியோர்கள் வரை அவர்களில் ஓர் தோழமையை ஓர் உறவின் அன்பை உருவாக்கியது.

கஜனின் சிறு உருவ தேற்றமும், அவனின் முகத்தில் மலரும் புன்னகையும் அவனின் அன்பிற்கு அடிமையாக்கும். அங்கு வாழும் மக்கள் யாவும் கஜனைப் பார்த்து கேட்கும் வினா “என்ன தம்பி சின்ன வயசில போராட வந்திட்டிங்க’ என்று.

ஆனால் கஜனின் பதில் அவர்களை ஒரு கணம் சிந்திக்க வைக்கும். வயது வேறுபாடுகள் பார்த்தால் நாம் எம் விடியலை என்றும் எட்டமுடியாது அப்பா அல்லது அம்மா என்றும் அவர்களை சார்ந்து வரும்.

கஜன் உறவுகளை அதிகம் நெருக்கம் வைக்க என்னோர் விடயமும் உண்டு. கண்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்ட உந்துருளி (மோட்டார் சைக்கிள்) கஜன் அல்லது ஈழமாறன் மற்றைய போராளிகள் ஓட்டிச்செல்வார்கள். கூடுதலாக அந்த வேலை கஜனே செய்வதால் பல இடங்கள் அவருடன் செல்வதால் நெருக்கம் அதிகமாகும் உறவுகள் மத்தியில்.

ஈழமாறன் ஒருநாள் தங்களுக்கு பணிவிடை (சமையல் சமைக்கும் ஓர் தாய் முன்னுக்கு விபரப்படுத்திய தாய்) செய்யும் தாயின் மகனை அரசியல் துறையிலே தங்கவைத்து பாடசாலை படிக்க வைத்தனர். ஒரு முறை அந்தச் சிறுவன் மாவிலித்துறையால் நெடுந்திவு மத்தியிலிருந்து கிழக்கு நோக்கி தனிமையில் செல்லும் போது மாவிலித்துறையில் நின்ற சிறிலங்கா கடற்படையினர் அந்தப் பையனை பற்றி தெரியும் அவன் இவர்களுடன் இருப்பது தெரிந்து அவனை மிரட்டியுள்ளார்கள். (தீவகத்தில் மக்கள் தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் தீவக மக்களுக்கும் சிங்களக் கடற்படைக்கும் அல்லது பொலிஸுக்கும் ஏற்படும் வேளை அரசியத் துறைப் போராளிகளிடம் வந்து கூறி அவர்கள் பேச்சுவார்த்ததை நடத்தி தீர்வு காண்பார்கள் அப்படி சில தருணத்தில் ஈழமாறன் பேசும் சிங்களத்தால் சிங்களக் கடற்படையினரும் ஈழமாறனைக் கண்டால் ஒரு மரியாதை இருந்ததது) ஈழமாறன் உடனே அந்த தாயின் மகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி தனிமையில் அந்த கடற்படையினருடன் சென்று வாதிட்டான். எங்களுகள் இடத்தில் இருக்கும் தாயின் மகனை மிரட்ட நீ யார்? ஏன் இப்படியெல்லாம் செய்தாய் என்று கையில் ஆயுதம் வைத்திருந்த சிங்களக் கடற்படையினர் மத்தியில் சீறினான். அப்படியாக எதற்கும் துணிந்து சில காரியங்களை முன்னேடுத்தான்.

தீவகத்தில் வாழ்ந்த ஒட்டுண்ணிக் குழுவான ஈபிடிபி ஈழமாறன் மீதும் ஏனைய போராளிகள் மீதும் கடுமையான குரோதமும் அவர்களுக்கு எதிரான பல சூழ்ச்சிகளையும் கட்டவிழ்த்தது விட்டது அந்த ஓட்டுண்ணிப்படைகள். எதற்கும் அஞ்சியவன் அல்ல ஈழமாறன். ஈபிடிபி முகாமைக் கடந்து சில இடங்களுக்கு செல்லவேண்டும் ஆனால் ஒருமுறை ஈழமாறன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது துரோகிகள் போராளிகளை சீண்டுவதற்காக வளர்ப்பு நாயை ஏவி விட்டனர். ஆனால் அரசியல் துறையைக் கடக்கும் பொது ஈபிடிபிகளின் வாகனம் வேகமாகத்தான் கடக்கும் அவ்வளவு பயத்தை ஏற்படுத்தி சில முயற்சிகளை செய்தான் ஈழமாறன்.

நெடுந்திவு மக்களுக்கான சில பணிகள் செய்வதாக சிங்கள ஒட்டுண்ணி குழுவான ஈபிடிபி அதன் தலைமை சில சுயலாபம் தேட முற்பட்டு வந்த நேரம் நெடுந்தீவில் ஓர் கலாசார மண்டபம் திறப்பதாக அதன் வேலைப்பாடுகளை பூர்த்தி செய்யாமல் இருந்தது. தானே அதில் அரசியல் லாபம் தேட முற்பட்ட ஒட்டுண்ணிக் குழு மக்களை ஏமாற்றிய வண்ணம் பிரதேசசபையை தன் கையில் வைத்து தன்னுடைய துரோகத்துக்கு துணைபோனவர்களுக்கு சலுகைகள் கொடுத்து வைத்திருந்தது. அப்போது அந்த மண்டபோம் அழியும் நிலைக்கு கைவிடப்பட்டது. மக்களுக்காக கட்டப்பட்ட மண்டபத்தை அன்று இருந்த பாதுகாப்பற்ற சூழழில் ஒட்டுண்ணிகள் வேடிக்கை பார்க்க அதை துப்பரவு செய்து அதில் தியாக தீபம் லெப்.கேணல் தீலிபன் அண்ணாவின் நினைவு நிகழ்வை நடத்திய துணிகரச் செயலில் ஈழமாறன், கஜனின் பங்கும் சில போராளிகளுடன் கலந்து இருந்தது. மக்களும் அதை மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று அதே ஒட்டுண்ணிகளின் கையில் அதே துரோகத்திற்கு விளைபோனவர்கள் அதில் அங்கத்துவராக பேணி லாபம் தேடுகின்றனர்.

நெடுந்தீவில் பல இளைஞர், யுவதிகளுக்கு தாயக விழிர்புனர்வு ஏற்படுத்தி சில போராட்ட சம்மந்தமான சில விடயங்களை உட்படுத்தி சில போராளிகளுடன் இணைந்து விடுதலைத் போராட்ட வழிகளுக்கு உதவும் பாதையை விரிவு படுத்தினான் ஈழமாறன். அதில் வேறு சில போராளிகளின் பங்குகளும் உண்டு.

நெடுந்தீவு மத்தியில் தலைநிமிர்வுடன் நிமிர்ந்திருந்த மாவீரர் நினைவான நினைவுகள் பல தடவை ஒட்டுண்ணி ஈபிடிபி குழுவால், சிங்களக் கடற்படையால் இடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் எழுந்தது. இன்று உள்ளதோ தெரியவில்லை. அன்று மீண்டும் தலைநிமிர்வுடன் நிமிர்ந்ததற்கு காரணமானவர்களில் ஈழமாறன், கஜனின் பங்கும் அதில் அதிகம்.

ஓர் முறை அனைத்துப் போராளிகளும் வன்னிக்கு மீள அழைக்கப்பட்டனர் பின் சில மாதம் கழித்து வருகை தந்த போது ஈழமாறன் மட்டும் ஏனைய போராளிகளுடன் தீவகம் வந்தான் ஆனால் பழகிய முகம் ஒன்றைக் காணவில்லை அது கஜனின் முகம் அப்போதுதான் அறிந்தோம் கஜணிற்கு ஓர் விபத்தில் கை முறிந்து சிகிச்சை பெற்று வருவதாக என்று.

சில காலம் கழித்து கஜன் தீவகம் வந்தவேளை தன்மகனே வந்ததாக உவைகைகொண்ட பெற்றோர்கள், தன் அண்ணன் வந்ததாக சகோதரிகள், தம்பி வந்ததாக சகோதர – சகோதரிகள் ஏராளம். பின் சில மாற்றங்கள் போராளிகள் மாற்றப்பட்டு அவர்களின் அரசியல் பணிகள் விரிவுபட்டது. தீவக உறவுகள் யாழ்நகரில் தென்பட்டால் அனைத்துப் போராளிகளையும் பற்றி விசாரிப்பதுமாக இருந்தது. ஆனால் அவர்களைப் பிரிந்து தீவகம் தவித்தது ஆனால் அவர்கள் வேறு இடத்தில் இருக்கிறார்கள் என மனம் ஆறியது. ஆயினும், அது வெகு காலம் நீடிக்கவில்லை.

காலமே தமிழீழத்தில் மாறியது, அன்று ஈழமாறன், கஜன் உட்பட பல போராளிகளின் அரசியல் போராட்ட தெளிவூட்டப்பட்ட சில இளைஞர் யுவதிகள் வரை தேசத்தின் விடியல் உணர்ந்து போராளியாகி கரங்களின் ஆயுதம் ஏந்திக் கொண்டார்கள்.

சமாதான மேகம் களைந்து, திறந்த அகலப் பாதை எம் தேசத்திலே சிங்களவனால் மூடப்பட்டு போர் மேகம் காரிருள் போல் சூழ்ந்தது. தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டது. மீண்டும் போராளிகள் யாழ்மண்ணிற்கு வருவார்களா என ஏங்கித் தகித்த உறவுகள் ஏங்கிய வண்ணம் தான் இருந்தார்கள்.

யாழ்மாவட்டத்தில் 29.04.2007 அன்று ஓர் சிறிலங்கா கடற்படைத் தளம் மீதான தாக்குதல் நடவடிக்கைக்காக செல்லும் வேளை எதிரியின் கண்காணிப்பு அதிகமாக இருந்தமையால் தாக்குதலுக்கு முன் எதிரி இவர்களை இனம் கண்டு இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டான்.

சில மணிநேரம் கடுமையான நேரடிச் சமர் மூண்டது. அன்று தீவகக் கடற்பரப்பில் வெடியோசை அதிர்வுகள் கேட்க இராணுவக் கட்டுப்பாட்டில் புலிகளின் வரவை எதிர்பார்த்திருந்த மனங்கள் போராளிகள் எதிரிக்கு தகுந்த பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள் என நினைத்திருப்பார்கள். அப்படியாக அன்றைய களச்சுழல் இருந்தது வானும் வெளிச்சமாகியது.

இறுதிவரை போராடி இறுதியில் ஒரு பெரும் முழக்கத்துடன் வானும் நிலவும் அதிர்ந்து வானும் ஒளிவெள்ளத்தில் பிரகாரமாகியது அதை மக்கள் பார்த்திருக்க கூடும். ஏன் காதால் கேட்டு உணர்ந்துருக்க கூடும். அங்கு………… போராடி இறுதியில் களவாழ்வு சற்று மாறி எதிர்பார்த்த சூழலில் அன்று இல்லை. தம் கையில் இருந்த ஆயுதங்கள் ரவைகள் தீரும் வரை எதிரியுடன் மண்டியிடாது களமாடிய வேங்கைகள் பின் ஓர் வெடிமருந்து நிரப்பிய அங்கியை (சார்ஜ்) இயங்கவைத்து அந்த வெடியதிர்வில் மேஜர் ஈழமாறனும், மேஜர் கஜனும் இன்னும் சில போராளிகளும் அந்த தீவக மண்ணை முத்தமிட்டபடி வரலாறாகினர்.

ஆனால் அன்றும் அறிந்திருக்க மாட்டார்கள் இவர்களுடன் ஒன்றாக பழகிய உறவுகள் இவர்கள் என்றும் வராத திசைக்கு வரலாறாகிச் சென்று விட்டார்கள் என அறியாது காத்திருக்கும் விழிகள்………..

அந்த தாயவள் உரைக்கும் சோக குரல் என் மனதில் இடியாக…., மேஜர் ஈழமாறன், மேஜர் கஜனுடன் அரசியல் பணிகள் செய்து தீவகத்தில் வரலாறான லெப்.கேணல் ரதன், வேறு ஒரு கடற்சமரில் வீரவரலாறான லெப்.கேணல் புயலினி முதல் பல போராளிகளின் நினைவில் அந்தத் தாயவள் உயிரற்ற உடலாய் இன்றும் தமிழீழ மண்ணில்…

அங்கும் எங்கும் இவர்களின் உறவுகளுக்கும், பழகிய தோழர் தோழிக்கும் இவர்களின் சுவாசம் கலந்த தீவகக்காற்றே நீ சென்று வீரரின் செய்தி உரைத்து ஆறுதல் கூறாயோ!!!

வேங்கைகளின் வீரம் பார்த்த வன்னி மண்ணே ஏங்காதே…..
இவர்களை நன்கு அறிந்த தீவகமே கலங்காதே….
தமிழீழ மண்ணே உந்தன் மடியில் மீண்டும் பிறப்பார்கள்.

நினைவுப்பகிர்வு:- இசைவழுதி

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply