Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா!

விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா என்ற பெயரை அறியாத போராளி கள் அனேகமாக இருக்க மாட்டாரகள். அதுவும் வன்னிக் கிழக்கில் பணியில் இருந்தவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஏனெனில் தமிழீழ மருத்துவப்பிரிவி ன் மிக முக்கிய இராணுவ மருத்துவமனை களில் ஒன்று கப்டன் கீர்த்திகா நினைவு இராணுவ மருத்துவமனை.
புதுக்குடியிருப்புப் பகுதியில், வீதியில் இருந்து அதிக தூரம் இல்லாது இருப்பினும், வான வெளி தாண்டி வரும் சூரியக்கதிர்கள் நிலத்தைத் தொடமுடியாதபடி முற்றுமுழுதாக உருமறைக்கப்பட்ட நிலையில் அந்த மருத்து வமனை சாதாரணமாக இயங்கிக் கொண்டி ருக்கும். தமிழீழத்தின் முக்கியமான மூத்த மருத்துவர்களான மருத்துவக்கலாநிதி எழு மதி கரிகாலன், மருத்துவக்கலாநிதி சூரிய குமார், மருத்துவக்கலாநிதி ராஜா மற்றும் மருத்துவக்கலாநிதி சிவபாலன் ஆகியோரு டன் தமிழீழ மருத்துவக் கல்லூரியின் மருத்து வப் பட்டப்படிப்பை முடித்த மருத்துவர்களும், உதவி மருத்துவக் கற்கைகளை முடித்த மருத்துவப் போராளிகளும், தமிழீழத் தாதியப் பயிற்சிக் கல்லூரியில் தாதியப் பயிற்சி முடித்த தாதிய போராளிகளும் ஒருங்கிணை ந்த பணிச்செயற்பாட்டில் அம்மருத்துவமனை தன் பணியை சிறப்பாகவே செய்து கொண்டிருந்தது.
107602690_2331438187151060_4276541278642761714_o
சாதாரணமாகப் போராளிகளுக்கு ஏற்படும் காய்ச்சல் அல்லது விழி சிகிச்சைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை தொடர்ந்த காலங்களில் அவை மட்டுமல்லா து, சண்டைக்களங்களில் விழுப்புண் ஏற்று வரும் போராளிகளுக்கான சத்திரசிகிச்சை கள் ஏனைய உடலியல் நோய்களுக்கான சிகிச்சைகளையும், போராளி / மாவீரர்கள் சார்ந்த குடும்பங்களுக்கான மருத்துவ சிகிச் சைகளையும் கீர்த்திகா மருத்துவமனை செய்யத் தொடங்கியது. வன்னிக் கிழக்கின் அதாவது A9 வீதியின் கிழக்குப் பக்கமாக இருந்த அனேகமான களமுனைகளின் மருத்துவக் காப்பீட்டு இடமாக கீர்த்திகா இராணுவ மருத்துவமனையே பின் நாட்களில் செயற்பட்டு வந்தது. சரி. கீர்த்திகா மருத்துவ மனையின் உருவாக்கத்தின் போது இந்த பெயர் பெற்றதற்கான காரணம் என்ன? யார் இந்த கீர்த்திகா? எதற்காக கீர்த்திகாவின் நினைவோடு இந்த மருத்துவமனை நிமிர்ந்து நின்றது? என்ற வினாக்கள் எமக்குள் நிச்சயமாக எழுவது சாதாரணமானதல்ல.
இதற்கான பதிலைப் பார்க்க முன் எமது விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ அரசிடம் ஒரு வழமை இருந்ததைப் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். அது மணலாற்றுக் காட்டில் இந்திய இராணுவத்தை எதிர்த்துக் களமாடிய காலத்தில் இருந்து பின்பற்றப்பட்ட ஒரு செயற்பாடு.
துறைசார்ந்த முகாம்களின் குறியீட்டுப் பெயர்கள் , படையணிகளின் பெயர்கள், வெடிபொருட்களின் பெயர்கள் தொடக்கம் வீதிகளின் பெயர்கள் மருத்துவமுகாம்கள், என அனைத்தும் விடுதலைக்காக விதையாக வீழ்ந்த மாவீரர்களின் பெயர்களையே தாங்கி நிமிர்ந்து நின்றன. இதன் அடிப்படையே அபயன், திவாகர், நீலன், கீர்த்திகா, கஜேந்தி ரன், சிந்தனைச்செல்வன், எஸ்தர், யாழ்வேல், பசுமை என இராணுவ மருத்துவமனைகள் தமிழீழம் எங்கும் பணியாற்றிக் கொண்டிருந் தன. அவ்வாறாகத் தான் மருத்துவத் துறை சார்ந்த போராளியான கீர்த்திகாவின் பெய ரையும் தாங்கி நிமிர்ந்து நின்றது கப்டன் கீர்த்திகா நினைவு மருத்துவமனை.
மருத்துவக் கலாநிதி திருமதி. எழுமதி கரிகாலன் அவர்களின் உதவி மருத்துவராக நீண்ட காலமாக பணியாற்றி பின் சிறுத்தைப் படையணியின் பிரதான மருத்துவநிலை யின் மருத்துவராக பணியாற்றிய போது வீரச்சாவடைந்த கீர்த்திகாவின் பெயரே இந்த இராணுவ மருத்துவமனையின் பெயராக நிமிர்ந்து நின்றது.
சாதாரணமாக ஒரு மூத்த மருத்துவரின் கீழ் உதவிமருத்துவராக பணியாற்றிட முடியாது. அதுவும் மருத்துவத்துறையின் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் மிக கடுமையான செயற் பாடு அது. சில வேளைகளில் சண்டை க் களங்களில் இருந்து ஒரே நேரத்தில் வரும் பல காயங்கள் அனைத்தையும் பிரதான மருத்துவர் தனித்து சிகிச்சை தர முடியாத சூழல் ஏற்படும் நேரங்களில், அவர்களுக்கான சிகிச்சைகளை பிரதான மருத்துவரின் உதவி மருத்துவர்களே செய்ய வேண்டிய சூழல் உருவாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் மருத்துவக்கலாநிதி எழுமதிக்கு பக்கபலமாக நின்ற உதவி மருத்துவர்களில் துடிப்பும் , நிதானமும், வேகமும், விவேகமும் கொண்டு டொக்டர் அன்ரியின் கண்ணசை வின் கட்டளைகளை கூட உள்வாங்கி, புரிந்து கொண்டு ஒவ்வொரு செயற்பாட்டையும் செய்யும் திறன் கொண்ட போராளியாக கீர்த்திகா இருந்தார்.
இவர் யார்? இயக்கத்தில் இவரது வகிபங்கு என்ன? இப்பத்தி அதைப் பற்றியே நீளப் போகிறது.
24.02.1976 இல் வன்னிமண்ணின் விவசா யம் செழிக்கும் கிராமமான மாமடு கிராமத்தி ல் விவசாயிகளான திரு / திருமதி கணபதிப் பிள்ளை குடும்பத்தில் நான்காவது பிள்ளை யாக வந்துதித்தவர் தான் யுகிதாவதி என்ற இயற்பெயரைக் கொண்ட கீர்த்திகா. இரண்டு மூத்த சகோதரிகளையும், ஒரு சகோதரனை யும் ஒரு தங்கையையும் உடன் பிறப்புக்களாக கொண்டு தமிழை நேசித்து தமிழோடு வளர்ந்து வந்தாள் யுகிதாவதி.தனது ஆரம்பக் கல்வியை, வ/ பெரியமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்று முடித்த நிலை யில், வ/ நெடுங்கேணி மகா வித்தியாலயம் அவளது இடைநிலைக் கல்விக்காக அவளை உள்வாங்கிக் கொண்டது. அக் காலத்தில் தான் யுகிதாவதி முழுவதுமாக புடம் போடப் பட்டாள். கணித பாடத்தில் உயர் புள்ளிகளை ப் பெற்று ஆசிரியர்களிடம் உயர் மதிப்பை பெற்ற அதே நேரம், ஏனைய பாடங்களிலும் சளைக்காதவளாக நிமிர்ந்து நின்றாள். மேடைப் பேச்சிலும் தன் வல்லமையைக் காட்டும் அவள் மேடை நாடகங்களில் பாத்திர மேற்று நடித்து தனக்கென நல்ல ரசிகர்களை யும் உருவாக்கி இருந்தாள்.சிறு வயதிலேயே இவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட யுகி தாவதி இந்த இடைநிலைக் கல்விக் காலத்தி ல், தன்னை தமிழீழத்துக்கான விடுதலை வேங்கையாக புடம்போடத் தொடங்கியது பெற்றவர்கள் அறியாத செயற்பாடு. சிங்கள தேசம் எம் மண்ணின் மீது வலிந்து திணித்த யுத்தம் அவளது மனதிற்குள் தன் தேசம் மீதான சிந்தனைகளை வலிந்து திணித்தன.
எறிகணை வீச்சுக்களும், விமானத் தாக்குத ல்களும், மரண ஓலங்களும், இடப்பெயர்வுக ளும் அவளின் மனதில் ஆழமான விடுதலை உணர்வைத் தூண்டி விட்டன.
தமிழீழ மாணவர் அமைப்பின் உறுப்பு மாணவி யாக தன்னை இணைத்துக் கொண் டு தமிழீழத்துக்கான பணிகளைச் செய்து கொண்டிருந்த காலத்தில் தன்னை முழுமை யான விடுதலைப் போராளியாக இணைத்து க் கொண்டாள். மகளிர் பயிற்சி பாசறை அணி 18 அவளது அடிப்படைப் பயிற்சிப் பள்ளியாகியது. 1991 ஆண்டு அப் பள்ளி அவளைக் கீர்த்திகா என்ற புதுப் பெயரைச் சூட்டி தமிழீழ விடுதலைப்புலி ஆக்கியது. அங்கிருந்து முழுமையான போராளியாக புடம் போடப்பட்டு வளர்க்கப்பட்டாள். அடிப் படை அரசியல், ஆயுத, தொழில்நுட்ப, தொலைத் தொடர்பு, மருத்துவப்பயிற்சிகள் என அனைத்தையும் சிறப்பாக செய்திருந்த அப் போராளிகளின் பயிற்சி நிறைவின் போது அவர்களின் தகுதிகாண் அடிப்படையி ல் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் புதிய போராளி கள் உள்வாங்கப்பட்டார்கள். அப்போது கீர்த்தி கா தமிழீழ மருத்துவப் பிரிவுக்குள் உள்வாங் கப் படுகிறாள்.
மருத்துவப்பிரிவில் மருத்துவப் போராளிகள் பலர் பணியில் இருந்தாலும், களங்கள் தமிழீழத் தாயகம் முழுக்க விரிந்ததாலும், போராளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக் காரணமாகவும் மருத்துவப் பிரிவின் ஆளணி வளமும் மேம்படுத்தப்பட வேண்டிய தேவை எழுந்ததாலும் மருத்துவப் போராளிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள், அடிப்படைக் கள மருத்துவ பயிற்சிகளை முடித்துக் கொண்டு மருத்துவப் பணிகளுக்காக ஒவ்வொரு மாவ ட்டங்களுக்கும் அனுப்பப்பட்டார்கள்.
அவ்வாறு மருத்துவப் பணிக்காக போராளி கள் உள்வாங்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம் மருத்துவப் போராளிகளுக்கான கள மருத்து வக் கற்கைப் பாடத்திட்டத்தைப் படித்து முடித் து பூரணமான ஒரு அடிப்படை கள மருத்துவப் போராளியாக உருவாக்கப்பட்டிருந்தாள் கீர்த்திகா.
கீர்த்திகாவின் கற்றல் திறமையானது. மூத்த மருத்துவரான Dr. எழுமதி கரிகாலனுக்கு, அவளை தனித்துவமாக அடையாளம் காட்டி இருந்தது. அவரால் கற்பிக்கப்பட்டு, வளர்க்கப் பட்ட போராளிகளுக்குள் அவளின் நிதானமு ம் கற்றல் செயற்பாட்டில் காட்டிய அதீத திறனு ம், எதையும் பொறுப்பெடுத்து தளராது செய் து முடிக்கும் செயற்பாடும் Dr. எழுமதிக்கு கீர்த்திகா மீது தனித்துவமான குறியீட்டைக் காட்டி நின்றது. அன்றிலிருந்து அவரின் உதவி மருத்துவப் போராளியாக பணியேற்று க் கொள்கிறாள் கீர்த்திகா. மூத்த மருத்துவரி ன் வழிகாட்டலில் அனுபவம் மிக்க மருத்துவப் பணியில் ஈடுபட்டுப் புடம் போடப்பட்ட கீர்த்தி கா, தமிழீழ விடுதலைப் புலிகளின் களங்கள் எங்கெல்லாம் விரிந்தனவோ, எங்கெல்லாம் திருமதி எழுமதியின் மருத்துவமுகாம்கள் நிமிர்ந்து நின்றனவோ அங்கெல்லாம் பணியாற்றிக் கொண்டே இருந்தாள்.
அன்றைய நாட்களில், யாழ்ப்பாணம் முதல் மணலாறு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் என்று வடதமிழீழம் எங்கும் விரிந்த பெரும் களங்களில் பின்தள/ பிரதான மருத்துவ நிலையின் வைத்தியராக Dr. எழுமதி அவர் களே பெரும்பாலும் செயற்பட்டார். 1990ல் மாங்குளம், கொக்காவில் தொடங்கி, 1991ல் மன்னார் சிலாவத்துறை, காரைநகர், ஆகாய க் கடல்வெளி வலிந்து தாக்குதல், 1993ல் பூனகரி என விரிந்த இயக்கத்தின் களங்களி லும், எதிரி தானே வலிந்து முன்னெடுத்த பல இராணுவ நடவடிக்கைகளின் போதும் Dr. எழுமதி அவர்கள் பிரதான மருத்துவ நிலைக ளில் நின்று சிகிச்சை வழங்கினார்.
இவ்வாறு Dr. எழுமதி செல்லும் களங்களுக்கு தானும் செல்லும் சந்தர்ப்பம் அன்ரியின் உதவியாளராக வந்ததன் மூலம் 1992 முற் பகுதியிலிருந்து கீர்த்திகாவுக்கும் கிடைக்கத் தொடங்கின. இவை அவருக்கு சிறந்த கள அனுபவத்தை வழங்கின. தனது சுறுசுறுப்பு, உற்சாகம், துடிப்பான பணி, பதட்டமின்றி நிதானமாக செயற்படும் இயல்பு, வேலைக ளில் காண்பிக்கும் வேகம் மற்றும் நேர்த்தி என்பவற்றின் மூலம் இதுபோன்ற களமுனை களிலும் தன் ஆற்றல்களை வெளிப் படுத்தி னார்.
1992 முற்பகுதியில் முல்லைத்தீவு முகாமிலி ருந்து 5 ஆம் கட்டை ஊடாக குமுழமுனையை க் கைப்பற்ற எதிரி மேற்கொண்ட ஒரு இராணுவ நடவடிக்கையின் போதும், அதே ஆண்டு நடுப்பகுதியில் ஆனையிறவிலிரு ந்து “பலவேகய – 2″ என்ற பெயரில் இயக்கச் சி சந்திவரை எதிரி மேற்கொண்ட ஒரு இராணுவ நடவடிக்கையின் போதும், பிரதான மருத்துவ நிலையத்தில் கீர்த்திகா இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்ததன் மூலம் அவரது ஆற்றல்களை அனைவராலும் புரிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற கள அனுபவ ங்கள், தனித்து பெரும் அணிகளின் மருத்துவ தேவைகளை தாங்கும் ஆற்றலை, ஆளுமை யை இவர் கொண்டுள்ளார் என்ற நம்பிக்கை யைப் பொறுப்பாளர்களிற்கு ஏற்படுத்தின.
சிறுத்தைப் படையணியின் பிரதான மருத்துவ முகாமுக்கு பணியாற்ற வேண்டிய நிலை வந்த போது, படையணியின் பிரதான மருத்துவமுகாம் பொறுப்பு நிலை மருத்துவப் போராளியாக பணியாற்றத் தகுதி இவருக்கு இருந்ததை அடையாளம் கண்டார்கள். அந்த நிலையில் கீர்த்திகா அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பணியாற்றத் தொடங்குகி றார்.
சிறுத்தைப் படையணியின் மகளிர் பிரிவு, கண்ட களங்கள் கொஞ்சமல்ல. அங்கே பணியேற்ற நாளில் இருந்து சிறுத்தைப் படையணியின் ஒவ்வொரு களநடவடிக்கை களுக்கும் முதுகெலும்பாக உழைத்த முக்கிய போராளி கீர்த்திகா. ஒரு சண்டைக்கு ஆயுத வளங்கல் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ, அவ்வளவு முக்கியம் வாய்ந்தது மருத்துவ வளங்கல். சண்டையணிப் போராளிகளின் உளவுரண் உடையாது காக்கும் ஒரு முக்கிய வளங்கல் மருத்துவ வளங்கல். தான் காயப் பட்டால், என் உயிரைக் காப்பாற்றி, சிங்கள எதிரியோடு போரிட்டு என் மண்ணைக் காக்க அடுத்த சண்டைக்கு தன்னை தயார்ப்படுத்த எமது மருத்துவர்கள் எம்மோடு உள்ளார்கள் என்பதே ஒவ்வொரு போராளிக்கும் இன்னும் வலுச் சேர்க்கும் வளங்கலாகும். அந்த வகை யில் சிறுத்தைப்படையணியின் ஒவ்வொரு போராளிக்கும் சிறந்த மனவுரணைக் கொடுத்திருந்தாள் கீர்த்திகா.
மிக நேர்த்தியான பணி, காயப்பட்டு வரும் போராளிகள் மட்டுமல்ல தளபதிகள், போரா ளிகள் என அனைவரும் நேசிக்கும் அற்புதமா ன திறமை மிக்க போராளியாக ஒரு பொறுப் பு மிக்க மருத்துவராகப் பணியாற்றினாள் கீர்த்திகா.1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு முகாம் வெற்றிகொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 1 தாக்குதலுக்கு முன்பான காலம், மணலாறுப் பகுதியில் விடுதலைப்புலிகளின் சண்டை அணிகள் நடவடிக்கையில் இருந்த நாட்கள் ஒன்றில், மணலாறு ஜீவன் முகாமில் மேஜர் சோதியா படையணியின் புதிய போராளிகளுக்கான அடிப்படைப் பயிற்சி நடந்து கொண்டிருந்த போது, நடந்த சம்பவம் ஒன்றை இங்கே குறிக்க வேண்டியது முக்கியத்துவமானது.
மணலாற்று காட்டுப்பகுதியில் அன்றைய நாட்கள் எல்லை வேலி என்று எதுவும் இருந்த தில்லை. அதனால் படையணிகள் நிலை யெடுத்திருந்த இடங்களுக்கு அடிக்கடி சிங்க ள இராணுவத்தின், வேவு அணியினர் வந்து செல்வது வழக்கமாக இருந்தது. அதனால் அதை முறியடிப்பதற்காகவும் போராளிகளின் பாதுகாப்பை நிலைப்படுத்தவும் சிறுத்தைப் படையணியின் மகளிர் அணி நடவடிக்கை யில் ஈடுபடுத்தப் பட்டிருந்தது. அப்போது சிறுத்தைப் படையணியின் வேவு அணிப் போராளியாக இருந்த இளம்பிறை பாம்புக்கடி க்கு இலக்காகினார். அப்போது உடனடியாக முள்ளியவளையில் இருந்த பிரதான மருத்து வ நிலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை.
மணலாற்றுக் காட்டில் இருந்து, முள்ளியவ ளைக்கு வருவதென்பது அப்போது சாதார ணமான விடயம் இல்லை. மறைந்திருந்து தாக்குதல் செய்ய காத்திருக்கும் சிங்களப் படைகளின் வேவு அணியினரையும், பதுங்கி த் தாக்கும் அணியினரையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதானதல்ல. பாதைப் பாதுகாப் பை உறுதிப்படுத்த சுற்றுப் பாதுகாப்பணி முன்னால் நகர்ந்து பாதையின் இருக்கும் இடர்களைக் களைந்து பாதுகாப்பை வழங்கி க் கொண்டு செல்ல, அதன் பின்னே தான் ஏனையவர்கள் வெளியேற முடியும். அவ்வா றான ஒரு நடவடிக்கை மூலம் இளம்பிறையை முள்ளியவளைக்கு கொண்டு செல்வதற்கான கால அவகாசத்தில், காப்பாற்ற முடியாது என நினைக்கும் அளவுக்கு பாம்புக்கடியின் தாக்கம் இருந்தது.
மூத்த மருத்துவர்கள் யாரும் இல்லாத போதும், களமருத்துவப் போராளியாக அங்கே இருந்த கீர்த்திகா 4 நாட்கள் கடுமையாக முயற்சி செய்து இளம்பிறையின் உயிரைக் காப்பாற்றியது அவரின் மருத்துவப் பணியில் ஒரு அடைவுக் கல் என்றே சொல்ல வேண்டு ம். இன்று இளம்பிறையின் இருப்பு எங்கென் று தெரியாது இருப்பினும், கீர்த்திகாவால் மணலாற்றுக் காட்டுக்குள் அடிப்படை கள மருத்துவ அறிவோடு காப்பாற்றப்பட்ட பின் பல களங்களில் எதிரியை துவம்சம் செய்த போராளியாக நிச்சயம் இளம்பிறை இருந்தி ருப்பார் என்பது திண்ணம்.
அவ்வாறான பணியின் ஒரு நாள் தான் அந்த கொடுமையான நாளும் பிறந்தது. சிறுத்தைப் படையணி, அப்போது எதிரியின் “ஜெயசிக் குறு “ நடவடிக்கையை முறியடிக்கும் பணியி ல் ஈடுபட்டிருந்தது. ஓமந்தைப் பகுதியில் சிறுத்தைப்படையணியின் பெண் போராளி கள் எதிரியோடு பொருதிக் கொண்டிருந்தார் கள்.மிக மூர்க்கமான சண்டைக் களம் அது. A9 வீதியை குறுக்கறுத்து கிளிநொச்சியை சென்றடைந்து யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப் பாதையை மீட்கும் நீண்ட திட்டத்தோடு நகர்ந்து வந்த சிங்களப்படைகளை எதிர்த்து நின்ற விடுதலைப்புலிகளின் வெற்றிக் களங்கள் நிறைந்த நேரம் அது. அங்குதான் இவர்களும் களமாடினார்கள்.
அவர்களுக்கான பிரதான மருத்துவ நிலையி ல் அதன் பொறுப்பாளரான கீர்த்திகாவும் பணியில் இருந்தாள். சிறுத்தைப் படையணி யின் வேவு அணி ஒன்று உள்நடவடிக்கைக் காக சென்று திரும்பியிருந்த அன்றைய நாள் 05.06.1997. உள்ளே வேவுக்காகவும், தாக்குத ல் நடவடிக்கைகளுக்காகவும் சென்று திரும்பி இருந்த அணியினர் தமது பணி முடித்து இராணுவப்பகுதியை விட்டு வெளியேறி கீர்த்திகாவின் மருத்துவநிலைக்கு அருகில் ஓய்வுக்காக வந்திருந்தனர். அந்த அணியின் தலைவி சஞ்சனா, நீண்ட நாட்களாக ஓய்வெ ன்பது இன்றி, சிங்களப்படைகளின் கட்டுப் பாட்டுப்பகுதிக்குள் தங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அவர்களை ஓய்வெடுக்குமாறு பணித்துவிட்டு தன் பணியில் இருந்த நேரம், அந்த அணியின் மருத்துவப் போராளியாக இருந்த விடுதலை தன் மருத்துவ பொருட்க ளை மீள் ஒழுங்கு படுத்த வேண்டிய தேவை இருந்ததால் அந்தப் பணியில் ஈடுபடுகின்றார்.
நீண்ட நாட்களாக, மழையில் நனைந்து சேற் றில் குளித்து அருவருக்கத்தக்க மணத்தோடு இருந்த அவரின் மருத்துவப்பையை தோய்த் து காயப்போட்டுவிட்டு அவரின் மருத்துவப் பையில் இருந்த பொருட்களை மீள் ஒழுங்கு செய்கின்றார். அப்போது பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததால் பிரதான மருத்துவ முகாமில் இருந்து அவற்றைப் பெற வேண்டுமென்று அங்கு சென்று அவற்றின் விபரத்தோடு மருத்துவப்பொருட்களுக்கான கோரிக்கையை கொடுக்கிறார்.
கீர்த்திகா உடனடியாகத் தான் அவற்றை ஒழுங்கு செய்து தருவதாகவும். நாளை இப் பொருட்களை மருத்துவ வளங்கல் பகுதியில் இருந்து பெறுவதற்காக தான் மாங்குளம் சென்று பெற்றுத்தருவதாகவும் கூறிச் செல் கிறார். அதே நேரம் தாம் அங்கு செல்வதால் மருத்துவநிலையை கவனித்துக் கொள்ளு மாறும் பணித்துச் செல்கிறார் கீர்த்திகா.
அன்றைய இரவுப் பொழுது அடுத்தநாள் காலைப் பொழுதாக சூரிய ஒளியோடு விடிகிறது. அனைவரும் தமது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஓய்வில் நின்ற வேவு அணியும் ஓய்வின்றி ஏதோ ஒரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
அப்போது முன்னரங்கில் எறிகணைகளின் தாக்குதல் அதிகரித்திருப்பது உணரக்கூடியதாக இருந்தது. வேவு அணியை அவசர உசார் நிலைக்குக் கொண்டு வருகிறார் அணித்தலைவி. ”தற்செயலாக நாங்கள் காயப்பட்டு எமது அடுத்த நடவடிக்கை எம்மால் குழம்பிப் போகக்கூடாது” என்பதனால் அவதானமாக இருக்க உத்தரவிடுகிறார். அனைவரும் பாதுகாப்பு நிலையில் இருக்கின்றனர்.
விடுதலை மட்டும் உடனடியாக கீர்த்திகாவின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்பதை சஞ்சனாவுக்கு கூறி அனுமதி கேட்கிறார். ஏனெனில் இந்தத் தாக்குதலால் யாராவது காயப்பட்டு வரலாம் என்பது நியமானது. அந்த நேரத்தில் கீர்த்திகா அங்கே இல்லை. மருத்துவ வளங்கல் எடுப்பதற்காக மாங்குளம் சென்றிருந்தார் கீர்த்திகா. அதனால் மருத்துவ வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய விடுதலை உடனடியாக அங்கே செல்ல வேண்டியது கட்டாயமாகிறது. அதனால் அணித்தலைவியும் அவருமாக மருத்துவமுகாமுக்கு செல்கின்றனர்.
தூரத்தே ஒரு டிப்பர் ரக வாகனம் வருவதை காண்கிறார்கள் இவர்கள். அதே நேரம் ஆளில்லாத வேவு விமானம் மேலே சுற்றிக் கொண்டிருந்தது.
அதையும் கவனிக்காத டிப்பர் வாகனம் மருத்துவ நிலைக்கு அருகில் வந்து நின்றது. அதில் இருந்து கீர்த்திகா மற்றும் ஜெனீபர் ஆகியோர் மருத்துவப் பொருட்களோடு இறங்கினார்கள். அவர்களைக் கண்டுவிட்டு விடுதலையும், சஞ்சனாவும் அருகில் செல்கிறார்கள். பொருட்களை தூக்கிக் கொண்டு மருத்துவநிலையை நோக்கிச் செல்கிறார்கள். ஜெனீபர் தனது தொலைத்தொடர்பு நிலைக்கு செல்ல விடுதலையும், சஞ்சனாவும் தேவையான மருத்துவப் பொருட்களை வாங்கிக் கொண்டு தமது நிலை நோக்கி நகர, கீர்த்திகா தனது நிலையை நோக்கி நகர்கிறார். அப்போது தான் அந்த கொடூரம் நிகழ்கிறது.
போராளிகள் காயப்பட்டால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவ வளங்கலை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்த கீர்த்திகாவின் மருத்துவநிலை நோக்கி எறிகணைகளை எதிரி பொழியத் தொடங்கினான். முதல் எறிகணை வரும் ஒலி கேட்டு பாதுகாப்பு நிலை எடுத்தவர்கள் நிமிர்ந்து பார்க்க கூட முடியாத அளவுக்கு புகை மண்டலம். தொடர்ந்து வந்த எறிகணைகளின் வெடிப்பு அந்த இடத்தையே போர்க்களமாக்கியது. அருகருகே வந்தவர்கள் பாதுகாப்பு நிலை எடுத்த போதும் கீர்த்திகாவுக்கு மேல் நேரடியாக விழுந்து வெடித்திருந்த முதல் எறிகணை கீர்த்திகாவைச் சிதறிப் போக வைத்தது. கீர்த்திகாவின் சிதறிய கை ஒன்று விடுதலை பதுங்கி இருந்த சிறு கிடங்குக்குள் வந்து முதுகில் விழுந்தது.
ஜெனீபர் தான் காயப்பட்டுவிட்டதாக கத்திக் கொண்டிருந்த திசை நோக்கி விடுதலை ஓடுகிறார். அங்கே இரண்டு கால்கள், கை, வயிறு, தலை என உடலில் பல இடங்களில் காயப்பட்டிருந்த ஜெனீபர் உயிருக்காக போராடியபடி இருந்தார். கீர்த்திகாவை எங்கும் காணவில்லை. தேடிய போது சிதறிப் போயிருந்த கீர்த்திகாவின் உடற்ப் பாகங்கள் சிலவற்றை அடையாளம் கண்டார்கள் மற்ற தோழிகள். கைத்தகடு கட்டப்பட்டிருந்த கை, கீர்த்திகாவின் கைதான் என்று அவர்களுக்கு உண்மையை உரைத்தது. மருத்துவ வளங்கலில் கொண்டுவரப்பட்டிருந்த மருத்துவப் பொருட்கள் கீர்த்திகாவின் இரத்தத்தில் சிவப்பாகிக் கிடந்தது.
படையணிப் போராளிகளின் உயிர் காத்த ஒரு மருத்துவப் போராளி கப்டன் கீர்த்தியின் கை ஒன்று சிதறிப் போய் ஒரு கிடங்குக்குள் கிடந்தது. அந்த மண் முழுவதும் அவளின் குருதியும், அவளின் தசைத் துண்டுகளும் கலந்து கிடந்தது. விடுதலைக்காக இளம் வயதிலேயே தன்னைப் புலியாக்கிய, கீர்த்தி காவின் புனித வித்துடல் அந்த மண்ணிலே மண்ணும், குருதியுமாக கலந்து சிவப்பாகிப் போய்க் கிடந்தது. 06.06.1997 ஆம் ஆண்டின் அன்றைய விடியல் எம் மனங்களில் குருதிச் சிதறல்களை விட்டுச் சென்று இன்றும் விழிகளில் சிவப்பாற்றை பனிக்கச் செய்து கொண்டு தான் இருக்கிறது.
தகவல் -விடுதலை-
மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர்

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை ...

Leave a Reply