ஒவ்வொரு நாளும் வாழ்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எம்முடன் வாழ்ந்தவர்களைப்பற்றி நினைக்க வைத்து விடும் அப்படித்தான் இன்றும் நெல்ஷா அக்காவின் நினைவுடன்…
வழமையான பாடசாலை விடுமுறை நாட்களில் சின்னமகள்(கவிநிலா)விற்கு இரவு தூக்கத்திற்கு போகும் போது கதைசொல்லவேண்டும் இன்று வழமைக்கு மாறாக மகளிடம் நான் கேட்டேன்.
“அம்மாவிற்கு தூக்கம்வரவில்ல இன்று நிங்கள் கதை சொல்லி என்னை முதலில் தூங்கவைத்த பின்தான் தூங்கவேண்டும் என்றேன் சரி இதற்கு ஒரு வழி இருக்கு என்று சொல்லி முதலில் கண்களை இருவரும் மூடுவம் என்றாள் .இப்போ நான் சொல்லுவதை கற்பனை பண்ணுங்க எண்டன் ஒரு பட்டியில் நிறைய ஆட்டுக்குட்டிகள் நிக்கிறது தெரிகிறதா? என்ன நிறம் எண்டு கேட்டன் பிடிச்ச கலரைவையுங்கள் என்றாள் இப்போ ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொன்றாய் பாய்ந்து கடவையை கடந்து வெளியே போகபோகுது நிங்கள் எண்ணுங்கள் என்றாள் …
அப்போது தான் எனக்கு இன்னொரு நினைவு வந்தது ஆட்டுக்குட்டிகள் நிக்கட்டும் நான் இப்போ உங்களுக்கு ஒரு கதை சொல்லுறன் …
மேஐர் நெல்ஷா அக்காவும் நானும் யெயசுக்குறு களமுனைக்கு இருந்த பிரதான கள மருத்துவமனை நிலையத்தின் பதுங்குழி பக்கத்தில் படுத்திருக்கின்றோம் வானத்தில் வெள்ளி பூத்து கிடக்கிறது. நெல்ஷா அக்கா களமருத்துவமனைகளிற்கு பொறுப்பாகவிருத்தவா அவாவிடம் இருந்தது ஒரு சயிக்கிள்தான் ஓமந்தையில் இருந்து மன்னார் வரையும் அதிலதான் போய் எல்லா வேலைகளையும் கவணிப்பார். இயக்கம் சொத்துகளை பாதுகாப்பதிலிருந்து. சிக்கனப்படுத்துவதுவரை சரி வர செய்வதில் அவளுக்கு நிகர் அவள்தான். அவளுடன் நல்லா பழகியவர்களிற்கு தெரியும் அவளது இழகியமனம். எங்களுக்கு அவா வாறது என்றால் நல்ல சந்தோஷம் சாப்பாட்டு சாமன்களும் கச்சானும் கொண்டு வருவா அவாட சகோதரன் பணம் அனுப்பி இருந்தால் அதிவிசேடமான உணவுப்பொருட்களுடன் வருவாள். அவளிற்கு வாங்கிக்கொடுக்கிற உடுப்புகளை தான் போடமாட்டா களத்தில் நிற்கும் பிள்ளைகளுக்குதான் கொடுப்பா
இடையிடையே மகளின் கேள்விகளுக்கு பதிலும் சொல்லிக்கொண்டு இருவரும் ஓமந்தை கிழவன்குளத்தில் நடந்து கொண்டிருந்தோம். எவ்வளவு களைத்துப்போய் வந்தாலும் வந்தவுடன சயிக்கிள துடைச்சு போட்டுதான் வருவா இப்படிதான்ஒர் இரவு படுத்திருக்கும் போது நித்திரை வர இல்லை என்றேன் வானத்தில இருக்கிற நட்சத்திரத்தில் 108ஜ சரியா க எண்ணி முடித்தால் உனக்கு பிடித்தவங்க கனவில் வருவார்கள் என்றா .மகள் கேட்டா எண்ணி முடித்திங்களா என்று இல்லை இடையில் நித்திரை என்றேன்.
இப்போ அந்த அன்ரி எங்க என்று கேட்க வீரச்சாவு என்றேன்அவா பற்றி சொல்ல நிறைய இருக்கு நேரம் அதிகாலை 1.30ஆகிவிட்டது நாளைக்கு சொல்கின்றேன் என்றேன்.
இன்று அக்கா கானநிலாவும் சேர்ந்துகொண்டா அந்த நெல்ஷா அன்ரி பற்றி மிச்ச கதையை சொல்லுங்க என்று…..
எம்முடன் வாழ்ந்தவர்களைப்பற்றி நாம் சொல்லாமல் யார் சொல்லப்போறார்கள்.
மிதயா கானவி