Home / மாவீரர்கள் (page 8)

மாவீரர்கள்

கேணல் ராயு – ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு

அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. எங்கள் போரியாரற் சாதனைகளையெல்லாம் நாங்கள் பேசும்போதும் எழுதும்போதும் வெளித்தெரிந்து விடாதபடி பக்குவமாய் மறைத்து வைத்திருந்த ஈடிணையற்ற போரியலாளனின் பிரிவைச் செரிக்க முடியாது நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். எங்கள் கேணல் ராயு அவர்கள் பதற்றமற்ற, அமைதியான, திடகாத்திரமான இரும்பு மனிதன். ...

Read More »

எடித்தாராவை மூழ்கடித்த கடற்கரும்புலிகள்

1990ம் ஆண்டு இரண்டாங்கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வலுப்பெறத்தொடங்கியிருந்தன.ஒவ்வொரு படையணியினரும் தத்தமக்கு வழங்கப்பட்ட இடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்குக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர். அதேசமயம் மேலதிக பகுதிகளைக் கைப்பற்றமுனைந்த இராணுவத்தினரின் முயற்சிகளுக்கெதிராக முறியடிப்புச்சமர்களையும் நடாத்திக்கொண்டிருந்தனர்.அத்துடன் கடற்புறா அணியினர் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் பலவற்றைத் தாய்த் தமிழகத்திலிருந்து கடல்வழிமூலம் தமிழீழத்திற்குக் கொண்டுவந்து கொண்டிருந்தனர்.அதுமட்டுமல்லாது பெருங்காயமடைந்தவர்களை இங்கிருந்து தமிழகத்திற்கு அனுப்பிச் சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்தனர். இது இவ்வாறிருக்க ,இரண்டாம் ...

Read More »

லெப். கேணல் கதிர்வாணன்

2002ம் ஆண்டு சமாதானக் காலப்பகுதியில் தளபதி கண்ணன் அவர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட கதிர்வாணன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்து வெளியேறியவன். தொடர்ந்து படைய அறிவியல் பிரிவிற்க்கு சென்றான். அங்கே படித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பணிப்புரைக் அமைவாக படைய அறிவியற் கல்லூரிப் போராளிகளில் குறிப்பிட்டளாவானவர்கள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் ஒருவனாக வந்தான்.இங்கு வந்தவர்களுடன் மேலும் பல போராளிகளுடன் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக லெப் கேணல் நிரோஐன் கடற்படைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு ...

Read More »

வேவுப்புலி மேஐர் சேரன் / அசோக்

1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த அசோக் பயிற்சியின் பின் வலிகாமப் பகுதியில் நின்று பல்வேறு களம் கண்ட ஒரு வீரனாவான் கந்தையாவைப் போலவே இவனும் பலாலிக்கான ஒரு வேவுக்காரன். ஆனால் இவனோ வலிகாமப் பகுதியிலிருந்து தனது வேவு நடவடிக்கையை ஆரம்பித்தான். ஒவ்வொருமுறை வேவு நடவடிக்கையின் போதும் இவனது தூரம் அதிகரித்துக் கொண்டபோனது. (அதிலும் ஒரு ஆனந்தம் ஏனெனில் தான் ஓடித்திரிந்து விளையாடிய தான் படித்த பாடசாலை இவைகளை சக ...

Read More »

நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – லெப் கேணல் குணா

இறப்பினும் மறவோம் இலக்கினில் தவறோம்! திரும்பிப் பார்க்கின்றோம் – சுதந்திரத்தின் சிகரத்தை நோக்கிய எங்கள் நெடும் பயணம்இ கண்ணுக்குள் விரிகிறது அந்த நெடுவழிப்பாதை. எழ எழ விழுந்துஇ விழ விழ எழுந்து…… எத்தனை இன்னல்கள்இ எத்தனை சவால்கள்இ எத்தனை அழுத்தங்கள்இ எத்தனை குழிபறிப்புகள். எல்லாவற்றையுமே எகிறிக் கடந்து எழ எழ விழுந்து…… விழ விழ எழுந்து…… திரும்பிப் பார்க்கின்றோம் – இரத்தத்தையும், சாம்பர்மேடுகளையும், சவப்பெட்டிகளையும் தமழனுக்குத் தந்தவர்களின் தலைவாசல்களுக்கு – ...

Read More »

முள்ளிவாய்கால் மண்ணில் விதையான லெப்.கேணல் அன்பழகன்

05.05.2009 அன்று முல்லைத்தீவு பகுதியில் இறுதி யுத்தத்தின் போது சிறிலங்காப் படையினருடன் களமாடி வீரச்சாவு ஈழமணித் திருநாட்டின் வடமாகாணத்தில் உள்ள யாழ்குடா நாட்டில் வலிகாமம் கிழக்குப் பகுதியிலே செம்மண் கனிவளத்துடனும் தென்னந் தோப்புக்களும் பனை வெளிகளும் வேளாண் நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் கடல் வளங்களும் நிறைந்த எழில்மிகு ஊர் பலாலி ஆகும். இவ்வூரானது பல உழவர் பெருமக்கள், கல்விமான்கள், மக்கள் விடுதலை போராட்ட வீரர்களை பெற்றெடுத்து தன்னகத்தே கொண்ட மண் ...

Read More »

மாவீரர் பூம்பாவை

வைகாசி மாதம் வருகின்றதென்றால் அது ஓர் இருள் சூழ்ந்த மாதமாகவும்,மனதில் கவலைகள் பெருகி குரல் வளையை நெரிக்கின்ற ஓர் உணர்வையும் தரும்.இம் மாதத்திலே எங்களோடு இருந்த எத்தனையோ நூற்றுக்கு மேற்பட்ட போராளிகளை இழந்துள்ளோம்.அவர்கள் இறுதிவரை நின்று களமாடியும் அவர்களை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் நாங்கள் இன்னும் எத்தனையோ மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்த முடியாத நிலையில்,ஒரு வருடத்தின் பின்போ அல்லது மூன்று,ஐந்து வருடங்களின் பின்போ அவர்களைப்பற்றி கேள்விப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையில் ஊமைகளாக உள்ளோம்.அந்த வகையில் எங்களோடு நிதித்துறை கணக்காய்வுப் பகுதியில் இருந்து இறுதி யுத்தத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட பூம்பாவை அக்காவைப் பற்றி எழுத நான் கடமைப்பட்டுள்ளேன். 1995ஆம் ஆண்டு மார்கழி மாதம் நானும் இன்னும் நான்கு போராளிகளும் அடிப்படைப் பயிற்சி முடித்து ஒரு இரவு நேரத்தில் நுணாவில் பகுதியில் இருந்த நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு கொண்டு வந்து விடப்பட்டோம்.நாங்கள் அங்கு சென்றடைந்தது ஒரு இரவு 8மணி இருக்கும்.அங்கே நிறைய அக்காக்கள் பெரிய ஹோலில்(hall)எல்லோரும் ஒவ்வொரு மேசையில் இருந்து பெரிய பெரிய புத்தகங்களில் பச்சைப் பேனையை வைத்துக் கொண்டு அங்க பார்த்து இங்கயும் இங்க பார்த்து அங்கயும் சரி போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

Read More »

லெப்ரினன்ட் புகழினி

புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் “லொட லொட” என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு “தெண்டித் தெண்டி”சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் ...

Read More »

உழைப்பின் சிகரம் லெப் கேணல் தமிழ்நேசன் (வின்சன்)

உங்களுக்கு என்ர அப்பாவை தெரியுமாம், உண்மையா அன்ரி?, என்றாள் பவித்திரா விழிகளை அகலத்திறந்தபடி, பதிலுக்கு காத்திராமல். நான் அடம்பன் பக்கம் போனால்” “வின்சன் டொக்டரின் மகள்” என்று எல்லாரும் என்னை சொல்லுவார்கள். அப்பா அடம்பன் வைத்தியசாலை (Mannar Adampan Government hospital ) இல் வேலை செய்யும் போது, ஒரு அம்மம்மாவிற்கு புடையன் பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவவாம் . மருத்துவ மனைக்கு கொண்டு வர வாகனம் இல்லை ...

Read More »