22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை ...
Read More »தமிழீழக் காற்றில் ஓயாத புயலாக வீசிக்கொண்டிருப்பார் கப்டன் விக்னம்
1984ம்ஆண்டில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த மாணவர்களில் அவர் ஒரு முதன்மைமாணவன். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கிய அவர் அன்றையநாட்களில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தனக்கென ஒரு இடத்தைப்பதித்திருந்தார் என்றால் அது மிகையாகாது. தமிழீழ இலட்சியத்தை வரித்துக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் முனைப்புப்பெற்ற 1984-ம்ஆண்டு ஒக்டோபர்மாதத்தில் ஒருநாள் இரவு கடற்கரையில்வாடியில் (மீன்பிடி உபகரணங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் கூடாரம்) படுக்கப்போறன் என்று வீட்டில் கூறிவிட்டுச்சென்றவர் காணாமல்ப்போனார். ஆனால் ...
Read More »கொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு நாளாக இன்றைய நாள் அமைகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப் பிரதேசம் இன்றைய நாளின் பெருமையைத் தாங்கி நிற்கிறது. நம்மில் பலருக்கு “கொக்குளாய்” என்னும் இடம் தமிழீழத்தில் இருப்பது தெரியாமற்கூட இருக்கலாம். காரணம் 1984ம் ஆண்டிலிருந்து சுமார் 35 ஆண்டுகளாக அந்நிலத்திற்குச் சொந்தக்காரர்களான எமது தமிழ் உறவுகள் அங்கே தமது வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருந்தனர் . சற்றுப் பின்னோக்கிப் பார்த்தோமானால் சில ...
Read More »