கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்றுகொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் நெஞ்சில் அழியாத தடங்களாகப் பதிந்திருந்திருக்கிறன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திரந்து பேசுமானால் இவனைப்பற்றி, இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாக சொல்லியிருக்கும். ஆனால், ...
Read More »கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்
வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடித்தபடி விளக்கையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் “குட்டான் மாமா வந்திட்டார்” என்ற மகிழ்ச்சியுடன் பாடப்புத்தகங்களை மூடிவிட்டு ஆரவாரித்து நின்றனர். அவர்களுக்கு ஒருபுறம் அச்சமும் இருந்தது. பாடப்புத்தகத்தில் கேள்வி கேட்பார். ...
Read More »லெப். கேணல் மணிவண்ணன்
அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் ...
Read More »லெப். கேணல் நீலன்
“உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல” என்பதற்கு எங்களிடம் உதாணரமாக அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய வயிறும், ‘அஸ்மா’ நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் நெஞ்சறையுமென பார்ப்பவர்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தை கொடுக்காத தோற்றம் கொண்டவன். என்னினும் இவனது துறுதுறுப்பான விழிகள் இவனின் தேடலிற்கான இயல்பினை வெளிப்படுத்தப் போதுமானவையாகும். வெற்றியின் அத்திவாரங்களினுள் மறைந்தவர்கள் பலர் வெளித்தெரிவதில்லை. அவர்களுள் ஒருவனாக நீலனும் இருக்கிறான். அவனது வாழ்வின் சில சம்பவங்களை மட்டும் ...
Read More »லெப். கேணல் சுடரன்பன்
முல்லை நிலமும், மருத நிலமும் ஒருங்கே அடி கொளிரும் மாவீரன் பண்டாரவன்னியன் அரசாண்ட மண்ணில் லெப். கேணல் சுடரன்பன் (ஆனந்தன்) அவதரித்தான். முல்லைத்தீவு பாண்டியன் குளம் பிரதேசத்தில் கரும்புள்ளியான் எனும் கிராமத்தில் சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளுக்கு எட்டாவது மகனாக பிறந்தான் கிருசாகரன் ஆரம்பக்கல்வியை பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை யாழ்/ தெல்லிப்பழை மகாஜன கல்லூரியிலும் கல்விக்களம் கண்டான். கல்வி கற்கும் காலங்களில் இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளை கண்ணெதிரே கண்டு வருந்தினான். ...
Read More »தமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam
குறிக்கோள் தாயகத்தின் தனித்துவம் பெற்ற வைப்பகமாகவும், மக்களின் நம்பிக்கையின் சின்னமாகவும், வழமைதாரரின் காவலனாகவும், பொருண்மிய மேம்பாட்டின் பங்காளனாகவும் தன்னைத் தாயகத்தில் மட்டுமன்றி தாயகத்துக்கு வெளியேயும் வெளிப்படுத்தி நிற்கும் வைப்பகப் பணியில் மக்களனைவரையும் தன்னுடன் இணைப்பதைத் தொலைநோக்காகக் கொண்டு செயற்படுகின்றோம். பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப் பெரும் பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் ...
Read More »தமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ...
Read More »விடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…?
விடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…? வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் ...
Read More »நடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்
22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை ...
Read More »தமிழீழ தேசியச் சின்னங்கள்
தேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன. தேசியம் என்பது ஒரு இனத்தையும்,அந்த இனம் வாழும் இடத்தையும் குறிப்பிடுகிறது தேசியம் வலுவான சக்தி, தேசியச் சின்னங்கள் தேசியத்திற்குரிய முக்கியத்துவம் தேசியச் சின்னத்திற்கும் உண்டு. தேசியம் என்ற கருப்பொருளுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் ...
Read More »