Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / கேணல் வீரத்தேவன் – அளம்பில் தரையிறக்கம் 04.04.2009

கேணல் வீரத்தேவன் – அளம்பில் தரையிறக்கம் 04.04.2009

04.04.2009 அன்று விடுதலைப் புலிகளின் முத்த தளபதி கேணல் ஜெயம், தளபதி கேணல் வீரத்தேவன், தளபதி பேரின்பம் தலைமையிலான என்பது போராளிகளை உள்ளடக்கிய அணிகளையும், அவர்களிற்குத் தேவையான பொருட்களையும் முள்ளிவாய்காலிலிருந்து நாயாற்று மலைப்பகுதியில் தரையிறக்கிவிட்டு அங்கிருந்த போராளிகளை முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுவருவதற்காகன பணி தேசியத் தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்படுகிறது.

அதற்கமைவாக கடற்புலிகளின் விநியோக அணிகளும் (பதினைந்து படகுகள்) இவர்களுக்கான பாதுகாப்பை அதாவது (கடற்புலிகளின் சிறப்புத் தளபதி அவர்களாளால் ஒவ்வொரு விநியோக நடவடிக்கைக்கு செல்லும்போது தமிழீழத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் விநியோக நடவடிக்கைமூலம் வரும் போராளிகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என கடற்புலிகளின் கடற்தாக்குதல் அணிகளுக்கு தெரிவிப்பார்.) சிறிலங்கா கடற்படையை இத்தரையிறங்கு அணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட கடற்புலிகளின் கடற்த் தாக்குதலணிகளும் ஒழுங்குபடுத்தப்பட்டு அணிகள் 03.04.2009 அன்று மாலை புறப்பட்டன.

Alampil-landing-2009-scaled

எமது அதிகமான படகு தொடரணிகள் கூடுதலாக சென்று கொண்டிருந்ததால் எதிரியால் இணங்காணப்பட்டு புறப்பட்டதிலிருந்து கடலுக்குள் எறிகணைகள் ஏவப்பட்டுக் கொண்டிருந்தன. என்ன இடர்கள் ஏற்படினும் தமக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்கமைவாக விநியோக அணிகள் சென்று தமக்கானா இடத்தில் நிலை கொண்டிருந்தது.

அதன் பின்னர் கட்டளை மையத்திலிருந்து கட்டளை கிடைத்ததும். அதாவது 04.04.2009 அதிகாலை சுமார் மூன்று மணியளவில் கேணல் வீரத்தேவன் தலைமையிலான அணியே முதலாவதாக தரையிறங்கியது.

நாமோ சிறு அணி எமது போராளிகள் அனுபவமற்ற நீண்ட தூர கடற்பயணம் செய்ததாலும், காப்பரணற்ற நிலையிலும் அவ்வேளையில் கரையில் நின்ற மற்றும் மேலதிகமாக வந்த இராணுவத்தினருடன் இறுதிவரை போராடி வீரச்சாவடைகின்றனர்.

அத்துடன் இம் முயற்சி பலனலிக்காததால் ஏனைய போராளிகள் கடற்புலிகளின் கடற்தாக்குதற் படையணியினரின் உதவியுடன் முள்ளிவாய்க்காலை வந்தடைந்தனர்.

அன்றைய நினைவிலிருந்து….

About ehouse

Check Also

கடற்கரும்புலி மேஜர் பாலன்

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் ...

Leave a Reply