Home / தமிழீழ கட்டமைப்புகள்

தமிழீழ கட்டமைப்புகள்

துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு

1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அருச்சுனா – இவர் பின்பு கடலில் வீரச்சாவடைந்தார் இசைப்பாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது வீரச்சாவால் அது தடைப்பட்டது. திலிபனின் உண்ணாநோன்பின் போது வசதிகள் ஏதுமற்ற நிலையில் காசிஆனந்தன் அவர்களின் இரு பாடல்களும், ஒரு பாடல் திலீபன் அழைப்பது சாவையா… புதுவை அண்ணரின் இரு பாடல்களும் ஒரு பாடல் ...

Read More »

போராளிகள் குடும்ப நலன் காப்பகம்

போராளிகள் குடும்ப நலன் காப்பகம் மூலம் இந்த மண்ணின் மைந்தர்களை பெற்ற பெற்றோர்களுக்கு அன்றே எல்லா நலத்திட்டங்களையும் வகுத்து கொடுத்த எம் தலைவன்

Read More »

அன்புச்சோலை மூதாளர் சந்திப்பு!

எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது. எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட வீடுகளிலையெண்டாலும் இவ்வளவு அன்பா ஆதரவா நாங்க இருப்பமே? கிளிநொச்சியில் டிப்போ சந்தியிலிருந்து கோணாவில் நோக்கிய வீதியில், ||அன்புச்சோலை|| என எல்லோராலும் அழைக்கப்படும், முதியோர் பேணலகத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன். கடந்த மூன்று தசாப்தங்களாக, எம்மீது திணிக்கப்பட்ட போரின் வடுக்களை எம்தேசம் இன்னும் ஆற்றிக்கொள்ளாது தவிக்கின்றது. எம்மீது திணிக்கப்பட்ட கொடிய போரின் ...

Read More »

தமிழீழ தேசிய தொலைக்காட்சி

2005 மார்ச் 26 ம் திகதி துவங்கப்பட்ட இத் தொலைக்காட்சிச் சேவையின் தலைமை நிலையம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. இச்சேவையே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது செய்மதித் தொலைக்காட்சிச் சேவையாகும். தினமும் இரண்டு மணிநேரம் ஓளிபரப்பான இந்த தொலைக்காட்சி சேவையை. இலங்கை, இந்தியா, மாலைதீவு, பாக்கிஸ்தான், ஐரோப்பா போன்ற நாடுகளில் செய்மதித் தொடர்பு மூலம் இதனைப் பார்க்க முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கலைகளில் மட்டுமல்ல தமிழுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஊடகத்துறைக்கும் தமிழீழ தேசம் எந்த ...

Read More »

லெப். கேணல் நவம் அறிவுக்கூடம்

லெப். கேணல் நவம் அவர்களின் ஞாபகார்த்தமாக நவம் அறிவுக்கூடம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் உருவாக்க்கப்பட்டது தாயக மீட்பு போரிலே அங்கவீனமான போராளிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் உருவாகிய ஒன்று. லெப் கேணல் நவம் அவர்கள் போராட்டத்திலே தனது ஒரு கரத்தினை இழந்தவர். இவ் நவம் அறிவுக்கூடம் நிலையத்திலே இருக்கும் போராளிகள் எமது தமிழீழ விடிவிற்கான போராட்டத்திலே பங்களித்து தம் அங்கங்களை இழந்தும் அல்லது முழுமையாக அங்கங்கள் ...

Read More »

தமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam

குறிக்கோள் தாயகத்தின் தனித்துவம் பெற்ற வைப்பகமாகவும், மக்களின் நம்பிக்கையின் சின்னமாகவும், வழமைதாரரின் காவலனாகவும், பொருண்மிய மேம்பாட்டின் பங்காளனாகவும் தன்னைத் தாயகத்தில் மட்டுமன்றி தாயகத்துக்கு வெளியேயும் வெளிப்படுத்தி நிற்கும் வைப்பகப் பணியில் மக்களனைவரையும் தன்னுடன் இணைப்பதைத் தொலைநோக்காகக் கொண்டு செயற்படுகின்றோம். பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப் பெரும் பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் ...

Read More »

தமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ...

Read More »

தமிழீழ நீதி நிர்வாகத்துறை

தமிழீழத்தில் நீதிநிர்வாகத்துறைக்கான எல்லா சட்டங்களும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் காலத்துக்குக் காலம் ஆக்கப்பட்டு பொது அறிவிப்பு மூலம் அறிவிக்கப்படும். தமிழீழ நீதி நிர்வாகத்துறை தேவையான எல்லா வரைச் சட்டங்களையும் தயாரிப்பதற்கு பொறுப்பாயிருக்கும். அவ் வரைச் சட்டங்கள் தேசியத் தலைவரின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அவை தேசியத் தலைவரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொது அறிவிப்புச் செய்யப்பட்டதும் தமிழீழத்திலுள்ள எல்லா மக்களும் அச் சட்டங்களை ஏற்று நடக்கும் கடப்பாட்டுக்குட்பட்டவர்களாவர். தமிழீழ சட்டக்கல்லூரி 1992ஆம் ஆண்டிலிருந்து ...

Read More »