Home / தமிழீழ கட்டமைப்புகள் / தமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு

தமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.

1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.

அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (LTTE) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார்.

அன்றுதொட்டு வளர்ந்து விருட்சமாகி தரை கடல் வான் என விரிந்து பல்வேறு இராணுவ துறை சார் மக்கள் சார் கட்டமைப்புகளாக விரிந்து, தமிழர்களுக்கான தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடிய சமநேரத்தில், தனிநாடு என்ற கட்டமைப்புக்கான அனைத்து கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் தான் இயக்க கொடியாக இருந்த புலிக்கொடி, அதில் இருந்த எழுத்துக்கள் நீக்கப்பட்டு, தமிழீழ தேசிய கொடியாக பிரகடனப்படுத்தப்பட்டது.

எமது தேசியக்கொடியை மஞ்சள்,சிவப்பு,கறுப்பு,வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன.

தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு. அந்த தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதால் அவர்களுக்குத் தன்னாட்சி(சுயநிர்ணய)உரிமை உண்டு. இந்த தன்னாட்சி உரிமை அவர்களது அடிப்படை அரசியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து,தன்னாட்சி உரிமையை நாட்டுவதற்கு தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது. மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கின்றது.

ஏற்றத் தாழ்வுகளற்ற, வர்க்க, சாதிய, முரண்பாடுகளற்ற பெண்ணடிமைத்தனமற்ற புரட்சிப்பாங்கான அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.

கரடுமுரடான, சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்த வழிக்கூடாகச் சென்று எமது இலக்கை அடைவதற்கு வேண்டிய உருக்குப்போன்ற உள்ள உறுதியைக் கறுப்பு நிறம் குறித்துக்காட்டுகின்றது.

அமைப்பினதும் போராட்டத்தினதும் தூய்மையை, நேர்மையை வெள்ளை நிறம் வெளிப்படுத்தி நிற்கின்றது.

எமது பண்டைய தமிழ் அரசர்களின் கொடியில் வாள் குறுக்காக இருக்கும். அதனை அடிப்படையாக வைத்தே துப்பாக்கி குறுக்காக எமது கொடியில் வந்ததாக தலைவர் சொல்கிறார்.

அந்த கொடியில் வட்டமாக 33 ரவைகள் இருக்கிறது. அதற்கான விளக்கம் கொடுக்கப்படாமல், அது அப்படியே இருந்தது.

ஆனால் 1976 மே 05 இல் தொடங்கிய ஆயுத விடுதலை போராட்டம்2009 மே 18 இல் மௌனிக்கப்பட்டது வரையான காலப்பகுதி 33 வருடங்கள்.

சிலவற்றை சொல்லியும் சிலவற்றை சொல்லாமலும் காலம் கற்பிக்கும் என புரிந்துகொள்வதற்கே விட்டுச்சென்ற, பல விடயங்களில் இதுவும் ஒன்றாக இருக்ககூடும்.

தமிழீழ தேசியக்கொடி – எமக்கான அடையாளம். உயிர்த் தியாகங்களால் உன்னதம் பெற்ற கொடி. அதனை போற்றுவதும் ஏற்றுவதும் எமது கடமையாகும்.

இதனைப் போலவே விடுதலைக்கான போராட்ட காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் பற்றிய தொகுப்பு திரட்டப்பட்டுள்ளது. கிடைக்கப்பெறும் தகவல் அடிப்படையில் அவை முழுமைப்படுத்தப்படும் என எண்ணுகின்றோம்.

 

 

tamil-eelam-structures-m

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:

01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, யாழ் செல்லும் படையணி, பதுங்கித் தாக்குதல் அணிகள், குறிபார்த்து சுடும் படையணி, ஆழஊடுருவி பதுங்கித்தாக்குதல் அணி, சிறுத்தைப் படையணி, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, வேவுப்பிரிவு

02. கடற்புலிகள், நீரடி நீச்சல் பிரிவு, கடல் வேவு அணி, சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி, அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்), நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி, கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி, நீரடி நீச்சல் அணி, படகு கட்டுமான பகுதி, கடற்கண்காணிப்பு பிரிவு (Radar Monitoring)

03. வான்புலிகள்
04. கரும்புலிகள்
05. அரசியற்துறை (அரசியல் தொடர்பு, மக்கள் தொடர்பு, பரப்புரை, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு)
06. புலனாய்வுத்துறை (வெளியகப் புலனாய்வுப் பிரிவு, உள்ளகப் புலனாய்வுப் பிரிவு)
07. படையப் புலனாய்வுப் பிரிவு
08. தமிழீழப் படைத்துறைப் பள்ளி
09. படைய தொடக்க பயிற்சிக் கல்லூரி, விசேட பயிற்சிக் கல்லூரி, படைய அறிவியல் கல்லூரி (MO), இராணுவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி
10. ஒட்டுக்கேட்கும் பிரிவு (Communication Monitoring – இராணுவ நகர்வுகளை விமானதாக்குதல்களை பற்றிய தகவல்களை ஒட்டுக்கேட்டு உசார்படுத்தும் அணி)
11. வரைபட பிரிவு (மாதிரிகள் அமைக்கும் அணி (model), தொலைத்தொடர்பு பரிபாசை தாள்கள் தயாரிக்கும் அணி)
12. சமர் ஆய்வு மையம்
13. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
14. அனைத்துலகச் செயலகம் (வெளிநாட்டு கிளைகள் நிர்வாகம்)
15. வழங்கற் பிரிவு
16. விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் – http://www.ltteps.org/
17. எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை
18. தலைமைச்செயலகம்
19. தலைமைச்செயலக பாதுகாப்பு அணி
20. இராணுவ தொழிநுட்ப பிரிவு (கணனிப்பிரிவு)
21. போர்க்கருவி தொழிலகம்

01. ஒளிப்பதிவுப் பிரிவு (உள்ளக படப்பிடிப்பு, களப் படப்பிடிப்பு)
02. நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான­ தொடர்பாடல் சேவை மையம்)
03. மருத்துவப் பிரிவு, திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு, பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை
04. தமிழீழ சுகாதார சேவைகள் (மருத்துவ சேவை, உடல்உளநலன் விழிப்புணர்வு சேவைகள்)
05. வெண்புறா ( செயற்கைகால் உற்பத்தி நிலையம்)

01. தமிழீழக் காவற்துறை (காவல்துறை, குற்றத் தடுப்புப் பிரிவு, குற்ற புலனாய்வுப் பிரிவு, சீர்திருத்தப் பள்ளி)
02. தமிழீழ வன வளத்துறை
03. தமிழீழ நிதித்துறை
04. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
05. தமிழீழ நீதித்துறை (தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ சட்டவாக்கப்பிரிவு, நீதிமன்றுகள்) – http://www.eelamjudicial.org/
06. தமிழீழ நிர்வாக சேவை (மாவட்ட திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான செயலகங்கள்)
07. சூழல் நல்லாட்சி ஆணையகம்
08. பெண்கள் அபிவிருத்தி மறுவாழ்வு மையம்
09. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
10. தமிழீழ விளையாட்டுத்துறை
11. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
12. தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களம்
13. தமிழீழ போக்குவரவு கழகம்
14. வடகிழக்கு மனிதவுரிமைகள் செயலகம் (NESoHR)
15. தமிழீழ போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு ( விசா வழங்கும் பகுதி)
16. தமிழீழ மாணவர் அமைப்பு (அன்னை பூபதி பொதறிவுப்போட்டி)
17. தமிழீழ வைப்பகம் http://www.bankoftamileelam.net/
18. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
19. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை (தமிழீழ வரலாற்றுக்கல்வி நூல் வெளியீடு)
20. சுங்கவரித் துறை
21. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
22. பொருண்மிய மதியுரையகம் (The Economic Consultancy House)
23. அனைத்துலக தொலைத்தொடர்புசெயலகம்
24. மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு)
25. தமிழீழ கல்விக் கழகம்
26. தமிழீழ கட்டுமானப் பொறியியல் செயலகம்

01. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
02. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
03. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
04. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
05. அன்பு இல்லம் (முதியோர்)
06. தளிர்கள் (தாய் தந்தை இருவரும் போராளிகளாக இருப்பவர்கள் அல்லது தாய் தந்தை ஒருவர் மாவீரராக உள்ள சிறார்களின் முன்பள்ளி)
07. இனிய வாழ்வு இல்லம் (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத மாற்றுதிறனாளி சிறுவர் சிறுமிகளுக்கானது)
08. சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது)­.
09. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
10. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)

01. அறிவமுது பொத்தகசாலை
02. விடுதலைப் புலிகள் செய்தி இதழ், ஈழநாதம் செய்தி இதழ், வெளிச்சம் செய்தி இதழ், சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்)
03. ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு
04. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
05. நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு, ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகை தயாரிப்பு, மொழியாக்கப்பிரிவு)
06. புலிகளின் குரல் வானொலி, தமிழீழ வானொலி, சிங்கள வானொலி
07. தமிழீழ இசைக்குழு
08. இணைய செய்தி நிறுவனங்கள் (தமிழ்நெற் என்ற ஆங்கில இணையமும் புதினம் என்ற தமிழ் செய்தி இணையமும் நேரடி தொடர்பாடலுடன் செயற்பட்டிருந்தன)

01. மாவீரர் பணிமனை
02. தியாகசீலம்
03. மாவீரர் துயிலும் இல்லங்கள்

01. சேரன் வாணிபம், சேரன் சுவையகம்
02. பாண்டியன் உற்பத்திப் பிரிவு, பாண்டியன் வாணிபம், பாண்டியன் சுவையூற்று
03. சோழன் தயாரிப்புகள்
04. பொன்னம்மான் உரவகை வாணிபம்
05. தென்றல் இலத்திரனியலகம்
06. தமிழ்மதி நகை மாடம், தமிழ்நிலா நகை மாடம், தமிழரசி நகை மாடம்
07. அந்திவானம் பதிப்பகம்
08. இளந்தென்றல் குடிவகைப் பிரிவு
09. ஒளிநிலா திரையரங்கு
10. அந்திவானம் பதிப்பகம்.
11. இளவேனில் எரிபொருள் நிலையம்.
12. இளந்தென்றல் தங்ககம், A9 தங்ககம்
13. காலணி (பாதணி உற்பத்தி மையம்)
14. மருதம் வாணிபம்.
15. மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்)
16. மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி)
17. கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை

01. தமிழ் ஊடக அறிவியல் கல்லூரி
02. தொழில் நுட்பக் கல்லூரி
03. அரசறிவியற் கல்லூரி
04. தமிழீழ பல்கலைக்கழகம் (கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இதற்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டபோதும் முழுமையடையவில்லை)
05. சிறுவர் கணனிப் பூங்கா

01. விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
02. கிராம கடற்றொழிலாளர் சங்கம் – சமாசம் – சம்மேளனம் (மாவட்டம்) – இணையம் (மாகாணம்) கட்டமைப்புகள்
03. மாவீரர் அரங்குகள்.
04. மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
05. மாவீரர் நினைவு வீதிகள்.
06. மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்­கள்.
07. மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
08. மாவீரர் நினைவுப் பூங்காக்கள் (தியாகசீலம் பூங்கா, சந்திரன் பூங்கா)
09. மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
10. மாவீரர் நினைவு நூலகங்கள்.
11. மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
12. மாமனிதர் விருதுகள் (தமிழ்த்தேசியப்பணி, சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)

About ehouse

Check Also

bank-of-tamileelam-1-1024x1010

தமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam

குறிக்கோள் தாயகத்தின் தனித்துவம் பெற்ற வைப்பகமாகவும், மக்களின் நம்பிக்கையின் சின்னமாகவும், வழமைதாரரின் காவலனாகவும், பொருண்மிய மேம்பாட்டின் பங்காளனாகவும் தன்னைத் தாயகத்தில் ...

One comment

  1. தலைமைச் செயலகம்
    கணனிப் பிரிவு
    போர்க்கருவி தொழிலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>